அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவு வெளியீடு

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவு வெளியீடு
அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர், அரசு என்ஜினீயரிங் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் 154 உதவி பேராசிரியர் பணி இடங்களை நிரப்ப கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை 12 ஆயிரத்து 134 பேர் எழுதினார்கள்.

இதேபோல், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 139 விரிவுரையாளர் பணி இடங்களை நிரப்புவதற்காக மே மாதம் 13-ந் தேதி போட்டித்தேர்வு நடந்தது. இந்த தேர்வினை 26 ஆயிரத்து 316 எழுதினார்கள். இந்த நிலையில், இரண்டு தேர்வுகளின் முடிவுகளையும் ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. தேர்வு வாரியத்தின் (www.trb.tn.nic.in) இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

ஒரு காலி பணி இடத்திற்கு 2 பேர் என்ற அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். அதன்படி, என்ஜினீயரிங் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வில் 304 பேரும், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வில் 277 பேரும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். இதுகுறித்து தகவல் அவர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. எழுத்துத்தேர்வை பொறுத்தவரையில் மொத்த மதிப்பெண் 190 ஆகும். இனிமேல், பணி அனுபவம், கூடுதல் கல்வித்தகுதி, பி.எச்டி. தகுதி ஆகியவற்றுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்பட்டு, மெரிட் பட்டியல் தயாரிக்கப்படும். அதில் இடம் பெறுவோர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

என்ஜினீயரிங் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கும், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கும் தனித்தனி சிறப்பு மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு: (என்ஜினீயரிங் அல்லாத கலை அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான (இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம்) சிறப்பு மதிப்பெண் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.

என்ஜினீயரிங் உதவி பேராசிரியர்

* 2 ஆண்டு அல்லது அதற்கு மேல் பணி அனுபவம் - 2 மார்க் (2)

(* கலை அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் எம்.பில். கல்வித்தகுதிக்கு 3 மார்க்)

* பி.எச்டி. - 8 மார்க் (5)

பாலிடெக்னிக் விரிவுரையாளர்

விரிவுரையாளர் பதவிக்கு என்ஜினீயரிங், என்ஜினீயரிங் அல்லாத கலை அறிவியல் பிரிவுகளுக்கு ஒரே சிறப்பு மதிப்பெண்தான் வழங்கப்படுகிறது.

* 2 ஆண்டு அல்லது அதற்கு மேல் பணி அனுபவம் - 2 மார்க்

* எம்.இ. அல்லது எம்.பில். - 3 மார்க்

* பி.எச்டி. - 5 மார்க்

சிறப்பு மதிப்பெண் விவரங்களை தேர்வுக்கான அறிவிப்பின்போதே ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துவிட்டது.
https://goo.gl/4YYsuQ


04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்