tamilkurinji logo


 

அரையிறுதியில் செரினா : பெடரர் அதிர்ச்சி தோல்வி,sports

sports




செய்திகள் >>> விளையாட்டு

அரையிறுதியில் செரினா : பெடரர் அதிர்ச்சி தோல்வி

First Published : Wednesday , 5th June 2013 12:25:31 AM
Last Updated : Wednesday , 5th June 2013 12:25:31 AM


அரையிறுதியில் செரினா : பெடரர் அதிர்ச்சி தோல்வி,sports

 பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். பெண்கள் பிரிவில் செரினா, இரானி அரையிறுதிக்கு முன்னேறினர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் தரவரிசையில் இரண்டாவது இடத்திலுள்ள பெடரர், ஆறாவது இடத்திலுள்ள பிரான்சின் டி சொங்காவை எதிர் கொண்டார்.

இதில் முதல் செட்டை 5-7 என இழந்த பெடரர், இரண்டாவது செட்டையும் 3-6 என கோட்டைவிட்டார். தொடர்ந்து சொதப்பிய பெடரர், மூன்றாவது செட்டை 3-6 என இழந்தார். முடிவில், பெடரர் 5-7, 3-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் டேவிட் பெரர், சக வீரரான டாமி ராபர்ட்டோவை 6-2, 6-1, 6-1 என வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அமெரிக்காவின் செரினா, ரஷ்யாவின் கஸ்னட்சோவாவை எதிர் கொண்டார். இதன் முதல் செட்டை 6-1 என வென்ற செரினா, இரண்டாவது செட்டை 3-6 என இழந்தார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி செட்டை, செரினா 6-3 என கைப்பற்றினார். முடிவில், 6-1, 3-6, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்ற செரினா அரையிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு காலிறுதியில் இத்தாலியின் சாரா இரானி, போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவை 6-4, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி, காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

பெண்கள் இரட்டையர் பிரிவு மூன்றாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பெதானி மட்டக்-சாண்ட்ஸ் ஜோடி, ரஷ்யாவின் பவ்லிசென்கோவா, செக் குடியரசின் சபரோவா ஜோடியை எதிர்கொண்டது.

இதன் முதல் செட்டை சானியா ஜோடி 6-7 என இழந்தது. இரண்டாவது செட்டில் 5-3 என இருந்தபோது,பெதானி இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் துடிக்க, சானியா ஜோடி போட்டியிலிருந்து வெளியேறியது.

அரையிறுதியில் செரினா : பெடரர் அதிர்ச்சி தோல்வி,sports அரையிறுதியில் செரினா : பெடரர் அதிர்ச்சி தோல்வி,sports அரையிறுதியில் செரினா : பெடரர் அதிர்ச்சி தோல்வி,sports
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல்

மேலும்...

 IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் பங்கேற்றுள்ள

மேலும்...

 மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர்

மேலும்...

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து 6–வது வெற்றியை பெற்றது.  10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in