அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை
மதாந்தோறும் வரும் அமாவாசை தினமானது இறந்த நமது முன்னோர்களுக்கு  விரதம் இருக்க ஏற்ற நாளாகும்


இவற்றில் ஆடி அமாவாசை தை அமாவாசை மகாளய அமாவாசை  முக்கியமானவை.  முன்றில் ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானது.


ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் -சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன்  26 -7-2014 ) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது.


இந்த விரதம் நம் முன்னோர்களை நினைத்து வணங்கும் விரதம் என்றாலும் இறந்த தந்தை தாய்க்காக மகன் இருக்கும் விரதம் ஆகும்.


காலையில் எழுந்து ஆற்றிலோ குளித்து விட்டு முடியாதவர்கள் வீட்டில் குளித்து விட்டு அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று அந்தணர்கள் மூலம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.


வீட்டை சுத்தம் செய்து குளித்து விட்டு பெண்கள் சமையல் செய்ய வேண்டும் .பின்பு தந்தை போட்டா முன்பு மூன்று இலைகளை போட்டு  சமைத்த எல்லா பதார்த்தங்களையும் அதில் படைத்து  கற்புர தீபம் காட்டி வணங்கி வழிபட வேண்டும்.


பின்பு இலையில் உள்ள அனைத்து பதார்த்தங்களிலும் சிறிது எடுத்து தனியாக ஒரு இலையில் வைத்து காகத்திற்கு வைக்க வேண்டும். அதனை காகம் உண்ண தொடங்கிவுடன் விரதம் இருப்பவர்களும் வீட்டில் உள்ளவர்களும் சாப்பிடலாம்.


நமது முன்னோர்கள்  காகங்களாக வந்து உணவை உண்பதாக நம்பிக்கை உள்ளது.
இந்த விரத்த்தை மேற்கொள்வதனால் இறந்து போன நமது முன்னோர்களின் அருள் பூரணமாக நமக்கும் நமது குழந்தைகளுக்கும் கிடைக்கும் என்பது ஜதீகமாகும்.https://goo.gl/18cgW9


28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு