tamilkurinji logo
 

அல்சர் வயிற்றுபுண் உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவு பொருள்கள் / Foods To Avoid Stomach Ulcer Tamil ,Foods To Avoid Stomach Ulcer Tamil Diet Tips for Ulcer-Food Habits, Good Nutrition, Diet Tips Stomach Ulcer Symptoms and remedies

Foods,To,Avoid,Stomach,Ulcer,Tamil,Diet,Tips,for,Ulcer-Food,Habits,,Good,Nutrition,,Diet,Tips,Stomach,Ulcer,Symptoms,and,remedies


அல்சர் வயிற்றுபுண் உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவு பொருள்கள் / Foods To Avoid Stomach Ulcer Tamil

First Published : Friday , 4th August 2017 08:07:11 PM
Last Updated : Friday , 4th August 2017 08:07:11 PM


அல்சர் வயிற்றுபுண்   உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவு பொருள்கள் / Foods To Avoid Stomach Ulcer Tamil
,Foods To Avoid Stomach Ulcer Tamil Diet Tips for Ulcer-Food Habits, Good Nutrition, Diet Tips Stomach Ulcer Symptoms and remedies

அல்சர் என்பது உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்சுவரில் உருவாகும் ஒருவகை புண். இது பாதிக்கப்பட்டவரை பலவித தொந்தரவுகளுக்கு ஆளாக்கும்.



ஆன்டாசிட்கள் (Antacids) அல்லது ஆன்டிபயாட்டிக்ஸ்களை (Antibiotics) பயன்படுத்தி இதன் வீரியத்தை குறைக்கலாம்.


அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வகை உணவுகளை சாப்பிடலாம், எவற்றை சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்துவைத்திருக்க வேண்டும். உணவு பழக்கத்தில் கவனமாக இருந்தாலே அல்சர் பிரச்னையில் இருந்து எளிதாக விடுபடலாம்.


உணவுகளில் கவனமாக இருந்தால், செரிமானமின்மை, வாயுத்தொல்லை, வாந்தி எடுத்தல், உணவை பார்த்தாலே அருவருப்பாக உணர்தல் ஆகியவை தவிர்க்கப்படும். வயிற்றில் ஏற்படும் கடுமையான எரிச்சல் உணர்வையும் இதனால் தடுத்துவிடலாம். அல்சர் உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவு வகைகள் இதோ...

தொடர்ந்து மது பழக்கம் உள்ள ஒருவருக்கு, பலவகை நோய்களுடன் அல்சரும் வந்து சேரும். ஏற்கனவே அல்சர் இருப்பவர்கள் மது இருக்கும் பக்கம் திரும்பி பார்க்கவே கூடாது. குடிப்பழக்கத்தால் நம் வயிற்றில் அமிலம் மென்மேலும் அதிகரிக்கத்தான் செய்யும்.

அல்சருக்கு ஆகவே ஆகாதது காரம். காரமான உணவுகளும் அதிக மசாலா சேர்த்த உணவுகளும் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். எதுக்களிப்பை ஏற்படுத்தும். அதனால் வயிற்றின் ஓரங்கள் எல்லாம் பாழாகும். ஏற்கனவே அல்சர் இருப்பவர்களின் நிலை இன்னும் மோசமாகிவிடும். அதிகம் மிளகாய் தூள், மிளகாய் சேர்த்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

தொடர்ந்து காபி குடிப்பதாலும் பெப்டிக் அல்சர் ஏற்படும்’ என்கிறது நவீன மருத்துவம். காபிக்கு பதிலாக, வயிற்றுக்கு இதம் தரும் மாதுளை ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் போன்ற வேறு ஏதேனும் பானங்களை அருந்தலாம். இவற்றால் வயிற்று புண் ஆறவும் வாய்ப்புள்ளது.

காபிக்கு பதிலாக விதவிதமான குளிர்பானம் குடிப்பவராக இருந்தாலும் அதுவும் பிரச்னையே. சோடாவிலும் குளிர்பானங்களிலும் இருக்கும் சிட்ரிக் அமிலம், வயிற்றின் அமிலத்தன்மையை அதிகரிக்கக்கூடியது. இது, செரிமானத்திலும் பிரச்னையை ஏற்படுத்தும். அல்சர் இருப்பவர்கள் சோடாவையோ, குளிர்பானங்களையோ அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

அல்சர் உள்ளவர்கள் பால் மற்றும் பால் உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிலர் பாலை குடித்தால் அல்சர் குணமாகும் என நினைக்கிறார்கள். ஆனால், பாலில் இருக்கும் புரத சத்தும் கொழுப்பு சத்தும் வயிற்று புண்ணுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். பால், வயிற்றின் அமில தன்மையை அதிகரிக்க செய்யும்.

இந்த இறைச்சி, வயிற்று ஓரங்களை பழுதடைய செய்யும். இதில் உள்ள அதிக அளவிலான புரத சத்தும், கொழுப்பு சத்தும் செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால், வயிற்றிலேயே அதிக நேரம் இறைச்சி உணவு தங்கிவிடும். இதனாலும், வயிற்றில் அமிலம் அதிகம் சுரக்க நேரிடும். இதுவும் அல்சரை அதிகரிக்க செய்யும்.

முதலில், அல்சர் உள்ளவர்கள் நேரத்துக்கு சாப்பிடவேண்டியது அவசியம். நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் செரிமானத்தை சீராக வைத்திருந்து, அல்சரில் இருந்து காக்கும். முட்டை, தயிர், மீன், பீன்ஸ் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ளலாம்.


உணவில் புதினாவை சேர்த்துக்கொள்ளலாம். தேங்காய் பால், மணத்தக்காளி கீரை ஆகியவை வயிற்று புண்ணை ஆற்றும். தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம். தேவையற்ற உணவுகளை தவிர்த்தால், விரைவில் அல்சர் பிரச்னையில் இருந்து மீளலாம்.


அல்சர் வயிற்றுபுண்   உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவு பொருள்கள் / Foods To Avoid Stomach Ulcer Tamil
,Foods To Avoid Stomach Ulcer Tamil Diet Tips for Ulcer-Food Habits, Good Nutrition, Diet Tips Stomach Ulcer Symptoms and remedies அல்சர் வயிற்றுபுண்   உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவு பொருள்கள் / Foods To Avoid Stomach Ulcer Tamil
,Foods To Avoid Stomach Ulcer Tamil Diet Tips for Ulcer-Food Habits, Good Nutrition, Diet Tips Stomach Ulcer Symptoms and remedies அல்சர் வயிற்றுபுண்   உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவு பொருள்கள் / Foods To Avoid Stomach Ulcer Tamil
,Foods To Avoid Stomach Ulcer Tamil Diet Tips for Ulcer-Food Habits, Good Nutrition, Diet Tips Stomach Ulcer Symptoms and remedies
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கறிவேப்பிலை டீ | curry leaves tea
தேவையான பொருட்கள் கறிவேப்பிலை - ஒரு கப் தண்ணீர் - 2 கப் சீரகம் - சிறிதளவு வெல்லம் - சிறிதளவு கருப்பு உப்பு - சிறிதளவு செய்முறை : 1.சீரகத்தை வறுத்து அரைத்துக் கொள்ளவும். 2. ஒரு பாத்திரத்தில் கறிவேப்பிலையை போட்டு

மேலும்...

 பெண்களின் எலும்பின் சக்தியை அதிகரிக்கும் மரவள்ளிக்கிழங்கின் மருத்துவப் பயன்கள்
மரவள்ளிக் கிழங்கு சாதாரனமாக எங்குமே கிடைக்கும் உணவுப்பொருளாகும். போர்க்காலங்களில் உணவு கிடைக்காத போது பல நாடுகளில் மக்கள் இந்தக் கிழங்கை சாப்பிட்டே உயிர்பிழைத்திருந்தனர். இக்கிழங்கு பலவிதமாக சமைக்கப்படக்கூடும், ஆனால் உணவு தவிர இக்கிழங்கிற்கு மருத்துவ ரீதியான பயன்களும் உண்டென்பது அவ்வளவாக அறியப்படாத

மேலும்...

 வாய் துர்நாற்றம் நீங்க பாட்டி வைத்தியம்| mouth smell treatment in tamil
காரட் சாறு எடுத்து, சர்க்கரை மற்றும் உப்பு என எதுவும் சேர்க்காமல் வெறுமனே குடிக்க வேண்டும். இப்படி 5 நாட்களுக்கு சாப்பிட்டால் உங்கள் வாய் நாற்றம் காணாமல் போய்விடும்.ஒரு  ஸ்பூன்  தேன் , அரை  ஸ்பூன் பட்டைதுாள் , இரண்டு  எலுமிச்சை  

மேலும்...

 கணவன் மனைவி உறவில் விரிசல் வராமல் இருக்க மனைவியை ரசியுங்கள்
இல்லற வாழ்க்கை இனிமையாகவும், சுமுகமாகவும் தொடர்வதற்கு கணவன் ஒருசில விஷயங்களில் மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். மனைவியை மகிழ்ச்சிப்படுத்தும் மந்திர யுக்தியை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இருவரில் கோபத்தை தூண்டும் வகையில் யார் பேசினாலும் மற்றொருவர் பொறுமை காக்க வேண்டியது அவசியம்.ஆத்திரத்தில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in