அல்லா என பெயரிட்ட குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க அமெரிக்க அதிகாரிகள் மறுப்பு

அல்லா என பெயரிட்ட குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க அமெரிக்க அதிகாரிகள் மறுப்பு
அமெரிக்காவில் 'அல்லா' எனப் பெயரிடப்பட்ட குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க மறுத்துள்ள அதிகாரிகளை எதிர்த்து பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள ஜோர்ஜியா மாகாணத்தில் எலிசபெத் ஹேண்டி மற்றும் பிலால் வால் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு 22 மாதக் குழந்தை ஒன்று உள்ளது. சமீபத்தில் இந்தக் குழந்தைக்கு ஷாலியாக்  கிரேஸ்புல்  லொரரினா அல்லாஹ் (ZalyKha Graceful Lorraina Allah) எனப் பெயர் சூட்டினர்.

ஆனால், இந்தக் குழந்தையின் பெயரின் இறுதியில் 'அல்லா' என்ற பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

'குழந்தைக்கு தந்தை அல்லது தாயின் பெயரை இறுதியில் சேர்க்கலாம். ஆனால், அல்லா என்ற பெயர் அரபி மொழியில் உள்ள வார்த்தை.

இதை பயன்படுத்துவது ஜோர்ஜியா மாகாண சட்டவிதிகளுக்கு எதிரானது' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளின் கருத்தை பெற்றோர் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

'அல்லா என்ற பெயர் புனிதமானது. இதை எங்களுடைய குழந்தைக்கு சூட்டுவதற்கு தடை விதிப்பது எங்களுடைய அடிப்படை உரிமைகளை பறிப்பதாக உள்ளது. பெற்றோரின் விருப்பப்படி குழந்தைக்கு பெயர் சூட்டுவது கூட குற்றமா?' எனப் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை காக்கும் அமைப்பு ஒன்றின் ஆலோசனைப்படி தற்போது பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
https://goo.gl/9H2UNu






03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே