tamilkurinji logo


 

அஸ்வின் எனக்கு போட்டி இல்லை- ஹர்பஜன்சிங், Harbhajan Singh says he is not competing with Ravichandran Ashwin

Harbhajan,Singh,says,he,is,not,competing,with,Ravichandran,Ashwin




செய்திகள் >>> விளையாட்டு

அஸ்வின் எனக்கு போட்டி இல்லை- ஹர்பஜன்சிங்

First Published : Thursday , 6th March 2014 10:36:40 PM
Last Updated : Thursday , 6th March 2014 10:36:40 PM


அஸ்வின் எனக்கு போட்டி இல்லை- ஹர்பஜன்சிங்,
Harbhajan Singh says he is not competing with Ravichandran Ashwin

கிரிக்கெட்டில் எனக்கு நான்தான் போட்டியாளரே தவிர, மற்ற வீரர்கள் யாரும் எனது போட்டியாளர்கள் இல்லை என்று சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுத் தொடர்களில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் பந்துவீச்சு எதிர்பார்த்த அளவு திருப்தி அளிக்கவில்லை. அதனால், அவருக்குப் பதிலாக அனுபவம் வாய்ந்த ஹர்பஜன் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், என்னுடைய போட்டியாளர் அஸ்வின் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார் ஹர்பஜன்.

இது குறித்து பிடிஐ செய்தியாளருக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:

மற்ற வீரர்களுடன் போட்டிபோடுவதை நான் எப்போதும் விரும்பமாட்டேன். எனக்கு நானே போட்டியாளர். சிறப்பாக விளையாடுவது மட்டுமே நமது பணி. எப்படி விளையாடினோம் என்பதை மற்றவர்கள் கணிக்கட்டும். தற்போதைய இந்திய அணி வீரர்கள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

சிறப்பாக விளையாடும் பட்சத்தில் வயது ஒரு தடையல்ல. 45 வயதில் ஒரு வீரர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அவரை யார் தடுக்க முடியும்? கிரிக்கெட் மீதான ஆர்வம் குறையாதவரை, இந்திய அணிக்கு தொடர்ந்து விளையாட விரும்புகிறேன்.

100-க்கும் மேற்பட்ட சர்வதேச டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய பிறகு, முதல்தர போட்டியில் பங்கேற்பது கடினம். அத்தகைய சூழல் ஒருவரை பரிசோதிக்கும். அந்தச் சோதனையில் பின்னடைவைச் சந்திப்பவன் நானில்லை என்று ஹர்பஜன் தெரிவித்தார்.


அஸ்வின் எனக்கு போட்டி இல்லை- ஹர்பஜன்சிங்,
Harbhajan Singh says he is not competing with Ravichandran Ashwin அஸ்வின் எனக்கு போட்டி இல்லை- ஹர்பஜன்சிங்,
Harbhajan Singh says he is not competing with Ravichandran Ashwin அஸ்வின் எனக்கு போட்டி இல்லை- ஹர்பஜன்சிங்,
Harbhajan Singh says he is not competing with Ravichandran Ashwin
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல்

மேலும்...

 IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் பங்கேற்றுள்ள

மேலும்...

 மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர்

மேலும்...

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து 6–வது வெற்றியை பெற்றது.  10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in