ஆகாஷ் டேப்லெட் 6 வாரத்தில் விநியோகம்

ஆகாஷ் டேப்லெட் 6 வாரத்தில் விநியோகம்
ஆகாஷ் டேப்லெட் கம்ப்யூட்டர் கேட்டு ஏற்கனவே பணம் செலுத்தியவர்களுக்கு 6 வாரங்களுக்குள் வழங்கப்படும் என்று டேட்டாவின்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, டேட்டாவின்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுனீத் சிங் துலி கூறியதாவது: பணம் செலுத்தியவர்களுக்கு சிம் போடும் வசதியற்ற ஆகாஷ் டேப்லெட்கள் 10 நாட்களுக்குள்ளும், சிம் போடும் வசதியுடன் கூடிய டேப்லெட்கள் 4 முதல் 6 வாரங்களுக்குள்ளும் வழங்கப்பட்டுவிடும்.

இதுவரை 40 லட்சம் டேப்லெட் கம்ப்யூட்டர்கள் கேட்டு ஆர்டர்கள் குவிந்துள்ளன. இவர்களில் 1 முதல் 1.5 சதவீதம் பேர் மட்டுமே ஏற்கனவே பணம் செலுத்தியுள்ளனர். விலை குறைந்த ஆகாஷ் முந்தைய வெர்ஷன் கம்ப்யூட்டரில் 366 மெகாஹெர்ட்ஸ் வேக பிராசசர், 256 எம்பி ராம் மெமரி, 2 ஜிபி பிளாஷ் மெமரி, வீபீ இன்டர்நெட் வசதி இருக்கும். புதிய வகை ஆகாஷ் கம்ப்யூட்டரில் ஆன்டிராய்ட் ஆபரேட்டிங் சிஸ்டம், 7 அங்குல தொடு திரை, 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசசர், 512 எம்பி ராம் மெமரி, 4 ஜிபி பிளாஷ் மெமரி இருக்கும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் புதிய வகை ஆகாஷ் வாங்க விரும்பினால், 500 கூடுதல் தொகை வசூலிக்கப்படும்.

முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே ஆகாஷ் முதலில் வழங்கப்படும். சிம்முடன் கூடிய ஆகாஷ் கம்ப்யூட்டர்கள் தயாரிப்பு இன்னும் 2 வாரங்களில் தொடங்கிவிடும்.
தற்போது 2,500 முதல் 3 ஆயிரம் டேப்லெட்கள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதை இந்த ஆண்டு இறுதிக்குள் 10 ஆயிரமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்டர்கள் வந்த வண்ணம் இருப்பதால் காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு சுனீத் சிங் துலி கூறினார்.
https://goo.gl/1AYfyb


19 May 2017

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பின்டு சாட்ஸ் (Pinned Chats) எனும் புதிய வசதி அறிமுகம்

15 May 2017

வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:

18 Jul 2015

தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்

25 May 2015

ஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்

26 Jan 2015

கூகுள் கிளாஸை பின்னுக்குத் தள்ளும் சோனியின் ஸ்மார்ட் ஐ கிளாஸ் அறிமுகம்!

16 Oct 2014

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகம் ஐபேட் ஏர் 2 , ஐபேட் மினி 3

24 Jun 2014

ரிவர்ஸ் கியர் கொண்ட ராட்சத 'கன்பஸ் 410' பைக்

08 Apr 2014

புதிய தொழில்நுட்பம் மூலம் 30 வினாடிகளில் சார்ஜ் ஏறும் செல்போன் பேட்டரி

09 Mar 2014

வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு

24 Feb 2014

மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் உலகின் அதி வேக கார்