ஆசியக்கோப்பை கிரிக்கெட்-வங்கதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

ஆசியக்கோப்பை கிரிக்கெட்-வங்கதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்
ஆசியக்கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான் வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய வங்கதேசம் 3 விக்கெட் இழப்பிற்கு 326ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய அனுமல்ஹக் சதம் அடித்து அசத்தினார். வங்கதேச தரப்பில் ஷகிப் அல்ஹசனைத் தவிர களமிறங்கிய மற்ற மூன்றுபேட்ஸ்மனும் அரைச்சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

327 ரன்கள் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் அஹமத் செஷாத் 103 ரன்களும் முகமது ஹபீஸ் 52 ரன்களும் எடுத்து அணிக்கு வலுவான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். பின்னர் பாகிஸ்தானின் விக்கெட்டுகள் திடீரென்று சரிந்தன. பின்னர் களமிறங்கிய பவாத் ஆலமும் அப்ரிடியும் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அணியின் ரன்வேகம் அதிகரித்தது.

25 பந்துகளில் 2 பவுண்டரி 7 சிக்சருடன் 59 ரன்கள் குவித்து அப்ரிடி அவுட்டானார். இதனால் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. அப்போது பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்திருந்தது. ஆலத்தின் நிலையான ஆட்டத்தினால் அந்த அணி 47.2 ஓவர்களில் 300 ரன்கள் குவித்தது.   

அணியின் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்ட போது சரிவை தடுத்தி நிறுத்திய ஆலம் 74 ரன்களில் ரன் அவுட்டானார். பரப்பரப்பான இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஒரு பந்தை மீதம் வைத்து பாகிஸ்தான் வெற்றியை ருசித்தது. இதன் மூலம் பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
https://goo.gl/rNUW32


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்