ஆசியக் கோப்பை கிரிக்கெட்-ஆப்கனை எளிதில் வீழ்த்திய பாகிஸ்தான்

ஆசியக் கோப்பை கிரிக்கெட்-ஆப்கனை எளிதில் வீழ்த்திய  பாகிஸ்தான்
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் உமர் அக்மல் சதம் அடித்து உதவ, அந்த அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

வங்கதேசத்தின் ஃபதுல்லாவில் வியாழக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும், முதன்முறையாக இப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்ற ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. இலங்கைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்திருந்ததால் கத்துக்குட்டி அணியை வீழ்த்தும் நோக்குடன் களம் புகுந்தது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. பாகிஸ்தானின் தொடக்க வீரர் ஷர்ஜில் கானை 25 ரன்களில் வெளியேற்றினார் ஹம்ஸா ஹோடக். மற்றொரு தொடக்க வீரர் அஹமது ஷேஸாத் அரைசதம் அடித்து வெளியேறினார். முஹமது ஹஃபீஸ், சோயிப் மசூத் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. கேப்டன் மிஸ்பா உல் ஹக் டக் அவுட்டில் வெளியேற, பாகிஸ்தான அணி 4 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்து தத்தளித்தது. அஃப்ரிடி 6 ரன்களில் ஏமாற்றினார்.

ஆனால், எதிர்முனையில் உமர் அக்மல் நிலையாக நின்று அரைசதம் கடந்தார். கடைசி கட்டத்தில் அதிரடிக்கு மாறிய அவர் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை சிதறடித்து சதம் அடித்தார். இக்கட்டான கட்டத்தில் அபாரமாக ஆடிய அக்மல் 89 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 102 ரன்கள் குவித்தார்.

இதனால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 248 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு நூர் அலி ஜட்ரன் 44 ரன்களும், அஸ்கார் ஸ்டேனிக்ஸாய் 40 ரன்களும், நவ்ரோஸ் மங்கள் 35 ரன்களும் அடித்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். 47.2 ஓவர்களில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணியின் முகமது ஹஃபீஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவிய உமர் அக்மல் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
https://goo.gl/znLZyN


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்