ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இருந்து டோனி விலகல் கோலிக்கு கேப்டன் பதவி

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இருந்து டோனி விலகல் கோலிக்கு கேப்டன் பதவி
12–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 25–ந்தேதி முதல் மார்ச் 8–ந்தேதி வரை வங்காளதேசத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் உள்பட 5 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் வருகிற 26–ந்தேதி வங்காளதேசத்துடன் மோதுகிறது. இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டியில் இருந்து இந்திய கேப்டன் டோனி திடீரென விலகியுள்ளார்.

வெளிநாட்டு தொடர்களில் தொடர்ச்சியான தோல்விகளால் டோனியின் கேப்டன்ஷிப் மீது முன்னாள் வீரர்கள் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். வெறுக்கத்தக்க டெஸ்ட் கேப்டன்ஷிப் என்று சவுரவ் கங்குலி வர்ணித்தார். பணிச்சுமையை குறைக்க அவரிடம் இருந்து டெஸ்ட் கேப்டன் பதவியை பறிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இத்தகைய நெருக்கடிக்கு மத்தியில் டோனி, ஆசிய கோப்பை போட்டியில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

‘நியூசிலாந்துக்கு எதிரான 2–வது டெஸ்டின் போது டோனிக்கு இடது பக்கவாட்டில் காயம் ஏற்பட்டது. காயம் குணமடைவதற்கு அவர் 10 நாள் சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். எனவே அவர் ஆசிய கோப்பை போட்டியில் இருந்து விலக்கப்படுகிறார்’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

டோனிக்கு பதிலாக ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை விராட் கோலி வழிநடத்துவார். தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் டோனிக்கு பதிலாக இடம் பெறுவார் என்றும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 வயதான கோலி இதற்கு முன்பு 8 ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து அதில் 7–ல் வெற்றியை தேடித்தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
https://goo.gl/C1H1Hh


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்