ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்படுமா?

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்படுமா?
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்படுமா? இல்லையா? என்பதை விடைத்தாள் மதிப்பீடு முடிந்த பிறகு முடிவு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும். தனியார் பள்ளிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இது பொருந்தும். இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தேர்ச்சி மதிப்பெண்ணாக 90 மார்க் (60 சதவீத மதிப்பெண்) நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தகுதித்தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 150 ஆகும்.

இடைநிலை ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரையில், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து பதிவுமூப்பு அடிப்படையில் செய்யப்பட உள்ளது. ஆனால், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். அரசு பள்ளிகளில் 22 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான தகுதித்தேர்வு கடந்த 12-ந் தேதி நடைபெற்றது. ஏறத்தாழ 61/2 லட்சம் ஆசிரியர்கள் இந்த தேர்வினை எழுதினார்கள்.

ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானோர், தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாகவும், நேரம் போதவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். எனவே, தேர்ச்சி மதிப்பெண் குறையுமா? என்று அவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில், தேவைப்பட்டால் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு (பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி.) தேர்ச்சி மதிப்பெண்ணை சற்று குறைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

தகுதித்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தேர்வு கடினமாக இருந்ததாகவும், நேரம் போதவில்லை என்றும் தேர்வு எழுதியவர்கள் தெரிவித்த கருத்தை அரசுக்கு ஏற்கனவே தெரியப்படுத்திவிட்டோம்.

தேர்ச்சி மதிப்பெண்ணை குறைப்பது குறித்து இன்னும் முடிவு ஏதும் எடுக்கவில்லை. விடைத்தாள்களை திருத்தி முடித்த பிறகு, எவ்வளவு பேர் தேர்ச்சி மதிப்பெண் (90 மார்க்) பெற்றிருக்கிறார்கள்? அதற்கு சற்று குறைவாக எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? அறிவிக்கப்பட்டுள்ள காலி இடங்களை (23 ஆயிரம்) நிரப்ப தேவையான நபர்கள் கிடைக்கிறார்களா? என்பதையும் ஆய்வு செய்த பின்னரே, தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்கலாமா? என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தகுதித்தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலான ஆசிரியர்கள் 70 மதிப்பெண் பெறும் அளவுக்கு பதில் அளித்துள்ளதாக தெரிகிறது. எனினும் 100-க்கு மேல் மதிப்பெண் கிடைக்கும் என்று சொல்லக்கூடியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தேர்வு முடிவினை ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அடுத்த தகுதித்தேர்வை டிசம்பர் மாதம் நடத்தவும் அது திட்டமிட்டுள்ளது.
https://goo.gl/rjCoZc


04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்