ஆண்டர்சனின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது - ரோகித் சர்மா

ஆண்டர்சனின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது  - ரோகித் சர்மா
பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு நுழைந்தது.

முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது. சாம்சன் 47 பந்தில் 74 ரன்னும் (7பவுண்டரி, 3 சிக்சர்) கரண் நாயர் 27 பந்தில் 50 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), ஹோட்ஜே 16 பந்தில் 29 ரன்னும் எடுத்தனர்.

190 ரன் இலக்கை 14.3 ஓவரில் எடுத்து வெற்றி பெற்றால் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை மும்பை அணிக்கு இருந்தது. அதற்கு ஏற்ற வகையில் அந்த அணியை சேர்ந்த நியூசிலாந்து வீரர் ஆண்டர்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவரும், அம்பதி ராயுடுவும் அதிரடியாக விளையாடினார்கள். 2 பந்தில் 8 ரன் தேவைப்பட்டபோது ராயுடு சிக்சர் அடித்தார். ஒரு பந்தில் 2 ரன் தேவைப் பட்டபோது அவர் ரன் அவுட் ஆனார். இதனால் மும்பை 14.3 ஓவரில் 189 ரன் எடுத்து இருந்ததால் ஆட்டம் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. ஒரு பந்தில் 4 ரன் எடுத்தால் தகுதி பெறலாம் என்ற நிலை மும்பைக்கு இருந்தது.

பல்க்னெர் வீசிய அந்த பந்தை ஆதித்யா தாரே சிக்சர் அடித்து மும்பையை ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்ற வைத்தார்.

மும்பை இந்தியன்ஸ் 14.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஆண்டர்சன் 44 பந்தில் 95 ரன்னும் (9 பவுண்டரி, 6 சிக்சர்), அம்பதி ராயுடு 10 பந்தில் 30 ரன்னும் (5 பவுண் டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

ராஜஸ்தானை வீழ்த்தி ‘பிளேஆப்’ சுற்றுக்கு நுழைந்தது குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது

இந்த வெற்றியை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. எனது இதயதுடிப்பே நின்று விடும் வகையில் இருந்தது. முடியாதது ஒன்று எதுவுமில்லை. இது மாதிரியான ஒரு அதிரடியான ஆட்டம் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து விடாது. இது மும்பை மக்களின் வெற்றியாகும். இந்த வெற்றியை மும்பை ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.

ஆண்டர்சனின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் அதிரடியாக இருந்தது. அம்பதி ராயுடு, ஆதித்யா தாரே ஆகியோரும் இந்த நம்ப முடியாத வெற்றிக்கு காரணமாக இருந்தார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆட்ட நாயகன் விருது பெற்ற ஆண்டர்சன் கூறும் போது, அம்பதி ராயுடு என்னுடன் இணைந்து நன்றாக ஆடினார். கடைசி பந்தில் ஆதித்யா தாரே சிக்சர் அடித்து வெற்றி பெற வைத்தார்.

மும்பை ரசிகர்களின் ஆதரவு என்னை மெய் சிலிர்க்க வைத்தது. எனது சொந்த ஊரில் விளையாடுவது போன்ற உணர்வு இருந்தது என்றார்.
https://goo.gl/MNfNWU


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்