ஆபாச படத்திற்கு அடிமையான மகனின் கையை வெட்டிய தந்தை

ஆபாச படத்திற்கு அடிமையான மகனின் கையை வெட்டிய தந்தை
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் ஜலபள்ளி காலனியில் பஹதிஷெரீப் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் கய்யூம் குரேஷி (வயது 45).  இறைச்சி விற்பனை செய்து வருகிறார். 


இவரது 18 வயது மகன் முகமது காலித் குரேஷி.  கேபிள் ஆபரேட்டர் ஒருவருக்கு உதவியாளராக வேலை செய்து வந்துள்ளார்.

சமீபத்தில் குரேஷியின் மகன் ஸ்மார்ட்  போன் ஒன்றை வாங்கி உள்ளார்.  அதில் தொடர்ந்து ஆபாச படங்களை பார்த்து வந்துள்ளார்.  இதற்கு அடிமையான மகனை தந்தை கண்டித்துள்ளார்.

கடந்த இரு நாட்களுக்கு முன் இந்த விவகாரத்தில் தந்தை மற்றும் மகன் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  இதில் ஆத்திரமடைந்த காலித் தந்தையை கடித்துள்ளார்.

 உடனடியாக, வீட்டிற்கு திரும்பி வரமாட்டேன் என கூறிவிட்டு வெளியேறிய காலித் அனைவரும் தூங்கிய பின் வீட்டிற்கு வந்துள்ளார்.

அதன்பின் நேற்று காலை இந்த விவகாரத்தில் மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  இதில் கோபத்தில் இருந்த குரேஷி மகனின் வலது கையை வெட்டியுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் அங்கு வந்தனர்.  அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுபற்றி குரேஷியின் மனைவி போலீசாரிடம் இன்று புகார் தெரிவித்துள்ளார்.  இதனை தொடர்ந்து ஐ.பி.சி.யின் பிரிவு 307ன் (கொலை முயற்சி) கீழ் குரேஷியை போலீசார் இன்று கைது செய்தனர்.

 காலித் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.  அவரது நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
https://goo.gl/9GiQUX


18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை

10 Dec 2018

நாடு முழுவதும் செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் தடை: மத்திய அரசு திட்டம்

16 Oct 2018

நாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு

11 Oct 2018

மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு

10 Oct 2018

சிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்