ஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும் : அமீர் விமர்சனம்

ஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும் : அமீர் விமர்சனம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி என்பதை விஜயிடம் இருந்து ரஜினிகாந்த் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் அமீர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.

மேலும் பலர் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, இன்று அதிகாலை 1 மணியளவில், துப்பாக்கிச்சூட்டில் பலியான ஸ்னோலின் என்கிற 17 வயது பெண்ணின் வீட்டிற்கு நடிகர் விஜய் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

மேலும், துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கினார். நடிகர் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று உதவி வழங்கிய செய்தியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக யாருக்கும் தொந்தரவு தராமல், இரவு நேரத்தில் ஆறுதல் சொல்லச் சென்றதை பலர் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில், அரசுக்கு எதிராகப் பேசிய வழக்கில் அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இயக்குநர் அமீரிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.


அப்போது அவர் கூறுகையில், நடிகர் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் வழங்கியது நல்ல விஷயம்.

அதே நேரம் ரஜினி போல ஆர்ப்பாட்டமாக இல்லாமல், அமைதியான முறையில் விஜய் தூத்துக்குடி சென்று ஆறுதல் தெரிவித்து இருக்கிறார்.


பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி என்பதை ரஜினிகாந்த், விஜயிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


https://goo.gl/5RcZic






18 Feb 2019

மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்

06 Feb 2019

பிரபல நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை

02 Jan 2019

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு

27 Dec 2018

ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி

27 Dec 2018

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்

21 Dec 2018

நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.

18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்