ஆலோசனை கூட்டத்தில் தூங்கிய அதிகாரியை சுட்டு தள்ள உத்தரவிட்ட வடகொரியா அதிபர்

ஆலோசனை கூட்டத்தில் தூங்கிய அதிகாரியை சுட்டு தள்ள உத்தரவிட்ட வடகொரியா அதிபர்
வடகொரியாவில் கிம் ஜோங் யுன்னின் ஆட்சி நடக்கிறது. அவரது தாத்தா, அப்பா, தற்போது அவர் என ஒரு குடும்பத்தினர்தான் ஆண்டு வருகின்றனர்.

 உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அங்கு மனித உரிமை மீறல்கள் மிக அதிகளவில் நடப்பதாக சர்வதேச அரங்கில் குற்றம் சாட்டப்படுகிறது.

கடுமையான சட்டங்கள் பிறப்பிப்பதில் பெயர்போன வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோங் யுன் , தமது ஆலோசனை கூட்டத்தில் தூங்கிய அதிகாரியை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டுள்ளது தற்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் வழக்கமான ஆலோசனை கூட்டத்தை நாட்டின் உயர் அதிகாரிகளுடன் நடத்தினார்.

அப்போது கூட்டத்தின் இடையே கல்வித்துறையின் உயர் அதிகாரி ஒருவர் அசதியால் கண் அயர்ந்துள்ளதாக தெரிய வந்தது.

இச்சம்பவத்தில் உக்கிர கோபமடைந்த  கிம் ஜோங் அவரையும், அவருடன் இன்னொரு அதிகாரியையும் விமானத்தை சுட்டு வீழ்த்தப்பயன்படுத்தும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த உத்தரவை அடுத்து குறிப்பிட்ட அதிகாரிகளை கைது செய்துள்ள சிறப்பு உளவுப்பிரிவினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதில் குறிப்பிட்ட கல்வித்துறை அதிகாரிக்கு ஜனாதிபதி கிம் மீது கடும் வெறுப்பு இருந்தது தெரிய வந்துள்ளது.

இதனால் அவர் கிம் பிறப்பித்துள்ள சீர்த்திருத்தங்களை கல்வித்துறையில் அமல்படுத்தவும் மறுத்து வந்துள்ளதை விசாரணையில் உளவுப்பிரிவினர் தெரிந்து கொண்டனர்.

மட்டுமின்றி இவரது கிம் ஜோங் விரோத போக்கிற்கு பல முறை தண்டனையும் பெற்று வந்துள்ளதும் தெரிய வந்தது.

இவருடன் கைது செய்யப்பட்ட முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் தனது சொந்த திட்டமொன்றை ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்த காரணத்தினால் ஜனாதிபதி கிம் ஜோங் இவருக்கும் மரண தண்டனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்கள் கண்டிப்பாக நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் 17 பதக்கங்களையாவது பெற்று வரவேண்டும் என கிம் உத்தரவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த எண்ணிக்கை குறைந்தால் பதக்கம் பெறாத வீரர்களை சுரங்க வேலைக்கு அனுப்புவதாகவும் அவர் கட்டளையிட்டுருந்தார்.
https://goo.gl/eyVCjZ


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே