tamilkurinji logo


 

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; இந்திய அணி அபார வெற்றி,




செய்திகள் >>> விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; இந்திய அணி அபார வெற்றி

First Published : Monday , 21st July 2014 08:15:15 AM
Last Updated : Monday , 21st July 2014 08:18:48 AM


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; இந்திய அணி அபார வெற்றி,

லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 295 ரன்களும், இங்கிலாந்து 319 ரன்களும் எடுத்தன. 24 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி 342 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 319 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், பந்து சூப்பராக ‘ஸ்விங்’ ஆனதால், அதை கணித்து ஆட முடியாமல் சிரமப்பட்டனர். 4-வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்திருந்தது. அணியின் வெற்றிக்கு இன்னும் 214 ரன்கள் தேவை என்ற சூழலில் இங்கிலாந்து அணி இன்று பேட்டிங் செய்துவிளையாடியது. இந்திய வீரர் இஷாந்த் சர்மாவின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.


 இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை லார்ச்சில் மைதானத்தில் வீழ்த்தியது. இந்திய வீரர் இஷாந்த் சர்மா 7 விக்கெட்டை வீழ்த்தினார். முகமது சமி மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் சார்பில் ஜோ ரூட் மட்டும் அதிகபட்சமாக 66 ரன்களில் எடுத்தார்.

1932-ம் ஆண்டில் இருந்து 17-வது முறையாக லார்ட்சில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிய இந்திய அணி இங்கு ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே (1986-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில்) வெற்றி பெற்றிருந்தது. தற்போது, லார்ட்சில் 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.  
 
 

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; இந்திய அணி அபார வெற்றி, இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; இந்திய அணி அபார வெற்றி, இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; இந்திய அணி அபார வெற்றி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல்

மேலும்...

 IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் பங்கேற்றுள்ள

மேலும்...

 மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர்

மேலும்...

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து 6–வது வெற்றியை பெற்றது.  10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in