இங்கிலாந்து தொடரில் வீராட் கோலியின் மோசமான சாதனை

இங்கிலாந்து தொடரில் வீராட் கோலியின் மோசமான சாதனை
இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் வீராட் கோலி 10 இன்னிங்சில் 134 ரன்களே எடுத்தார். இது மோசமான சாதனையாகும்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இந்தியா 1-3 என்ற கணக்கில் இழந்தது. அதோடு கடைசி இரண்டு போட்டிகளில் படுதோல்வி அடைந்தது.

இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4-வது வீரராக களம் இறங்கிய வீராட் கோலி மொத்தம் 10 இன்னிங்சில் 134 ரன்களே எடுத்துள்ளார்.

நாட்டிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 1, 8 ரன்களும், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் 25, 0 ரன்களும், சவுத்ஆம்ப்டனில் நடைபெற்ற 3-வது போட்டியில் 39, 28 ரன்களும்,  மான்செஸ்டரில் நடைபெற்ற 4-வது டெஸ்டில் 0, 77 ரன்களும், ஓவலில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் 6, 20 ரன்களும் எடுத்தார்.

இவர் 10 இன்னிங்சில் மொத்தம் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். கோலியின் சராசரி 13.4 ஆகும். இதற்கு முன் 1947-48-ம் ஆண்டு சந்து சர்வத் 10 இன்னிங்சில் விளையாடி 100 ரன்கள் எடுத்தார். இவரது சராசரி 10 ஆகும். இதுவே டெஸ்ட் போட்டியில் 4-வது வீரராக களம் இறங்கில் இந்திய வீரர் எடுத்த குறைவான சாராசரியாகும்

இந்த மோசமான சாதனைக்கு அடுத்தப்படியாக கோலி 134 ரன்கள் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். 67 வருடங்களாக 4-வது விக்கெட்டுக்கு இறங்கும் முன்னணி வீரர் இவ்வளவு மோசமாக விளையாடியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 3-வது நபராக களம் இறங்கிய புஜாரா 5 இன்னிங்சிற்கு மேல் விளையாடி குறைந்த சாராசரி (22.2) என்ற மோசமான சாதனையை பெற்றுள்ளார்.
https://goo.gl/uVBJCe






15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்