இடியாப்பம்/Idiyappam
First Published : Tuesday , 2nd February 2016 12:50:21 PM
Last Updated : Tuesday , 2nd February 2016 12:50:21 PM
தேவையான பொருள்கள்
புழுங்கல் அரிசி - அரை கிலோ
நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
அரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து நன்கு கழுவி உப்பு சேர்த்து அரைக்கவும். மிகவும் நைசாக அரைக்க கூடாது தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து நல்லெண்ணய் ஊற்றி சூடானதும் மாவை ஊற்றி கிண்டவும்.மாவு கெட்டியானதும் இறக்கவும்.
இட்லி பானையை அடுப்பில் வைத்து இட்லி தட்டில் மாவை இடியாப்ப குழலில் போட்டு பிழியவும்.
சீக்கிரம் வெந்து விடும் சூடாக தேங்காய் பால் அல்லது ஆட்டுக்கால் பாயாவுடன் பரிமாறவும்