இத்தாலி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 250-ஐ தாண்டியது

இத்தாலி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 250-ஐ  தாண்டியது
இத்தாலியில் நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரது எண்ணிக்கை 250-ஐ தொட்டது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருடன் இருப்பவர்களை மீட்க மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர்.

இத்தாலி நாட்டின் மத்திய பகுதியை நேற்று அதிகாலை 3.36 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவானது. நில நடுக்கத்தை தொடர்ந்து 80 முறை அதிர்வுகள் ஏற்பட்டன.


இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் ரோமிலும் கட்டிடங்கள் குலுங்கின. இது 20 வினாடிகளுக்கு நீடித்தது. அமாட்ரைஸ் என்ற சிறிய நகரமே நில நடுக்கத்தில் சின்னாபின்னமானது.

நிலநடுகத்தினால் 38 பேர் உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்டது. இதற்கிடையே பலரது சடலங்களை மீட்பு குழுவினர் இடிபாடுகளில் இருந்து வெளியே எடுத்தனர்.

பலியானோர் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்தது. மீட்புப்படையினர் மீட்பு பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல கிராமங்களில் சாலைகள் உருக்குலைந்து போனதால் மீட்புப் படையினர் சென்றடைவதற்கு சிரமப்பட்டதாக கூறப்படுகிறது.

பல இடங்களில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்புப்படையினர் வெறும் கைகளால் தோண்டியும் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை தரப்படுகிறது.

368 பேர் காயம் அடைந்து உள்ளனர் என்றும் அதில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே உயிரிழந்தோரது எண்ணிக்கை 159-ல் இருந்து 250 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று இரவு முழுவதும் உயிர் பிழைத்தவர்கள் நடு ரோட்டில் தங்கினார்கள்.

அப்போதும் நிலம் குலுங்கிக் கொண்டே இருந்தது. அப்போதும் 5.1 மற்றும் 5.4 ரிக்டர் அளவுக்கொண்ட பூமி அதிர்வு உணரப்பட்டது.

பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருடன் இருப்பவர்களை மீட்க மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர்.

நிவாரணப் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே பலரது நிலை மோசமாக உள்ளதாலும், கட்டிடங்கள் இடிந்து விழுந்து இருப்பதாலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

https://goo.gl/V763Ra


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே