இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து- சென்னை அணி 5-வது வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து- சென்னை அணி 5-வது வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணி 3–0 என்ற கோல் கணக்கில் மும்பையை சாய்த்து 5–வது வெற்றியை பெற்றது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரில் மும்பையில் நேற்றிரவு நடந்த 39–வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி.–சென்னையின் எப்.சி. அணிகள் சந்தித்தன. காயம் காரணமாக நட்சத்திர வீரர் இலனோ சென்னை அணியில் இடம் பெறவில்லை.


 விறுவிறுப்பாக தொடங்கிய ஆட்டத்தில் 25–வது நிமிடத்தில் மும்பை வீரர் ஆண்ட்ரே மொரிட்ஸ் அடித்த சூப்பர் ஷாட்டை, சென்னை கோல் கீப்பர் பிராசிக்லியானோ தடுத்து முறியடித்தார். முதல் பாதியில் இரு அணியினராலும் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.

பிற்பாதியில் சென்னை வீரர்கள் அமர்க்களப்படுத்தினர். 71–வது நிமிடத்தில் சென்னை வீரர் புருனோ பெலிஸ்சரி எளிதாக கோல் போட்டு முன்னிலையை ஏற்படுத்தினார்.


81–வது நிமிடத்தில் ஜெய்ரோ சுவாரஸ் அடித்த ஷாட்டை மும்பை கோல் கீப்பர் சுப்ரதா பால் துள்ளி குதித்து தடுத்து வெளியே அனுப்பினார். ஆனால் அவர் சுதாரிப்பதற்குள் மற்றொரு சென்னை வீரர் தனசந்திர சிங் பந்தை கோலுக்குள் உதைத்து விட்டார்.

இதைத் தொடர்ந்து, 89–வது நிமிடத்தில் எதிரணி வீரர் பவுல் செய்ததால் சென்னைக்கு ‘பிரிகிக்’ அதிர்ஷ்டம் கிட்டியது. 21.50 மீட்டர் தூரத்தில் இருந்து ‘பிரிகிக்’ வாய்ப்பில் சென்னை அணியின் மாற்று ஆட்டக்காரர் கிறிஸ்டியன் ஹிடல்கோ உதைத்த ஷாட், சுவர் போன்று வரிசையாக நின்ற மும்பை வீரர்களையும், கோல் கீப்பர் சுப்ரதா பாலையும் ஏமாற்றி பிரமாதமாக கோலானது.

முடிவில் சென்னை அணி 3–0 என்ற கோல் கணக்கில் மும்பையை வீழ்த்தி 5–வது வெற்றியை பெற்றது.

இன்றிரவு 7 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் கவுகாத்தி–டெல்லி அணிகள் மோதுகின்றன.


அணி ஆட்டம் வெற்றி டிரா தோல்வி புள்ளி

சென்னை 10 5 4 1 19

கொல்கத்தா 10 4 4 2 16

கேரளா 10 4 3 3 15

கோவா 10 3 3 4 12

புனே 10 3 3 4 12

மும்பை 10 3 3 4 12

கவுகாத்தி 9 2 4 3 10

டெல்லி 9 1 4 4 7
https://goo.gl/69YRe1






15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்