இந்தியாவில் ஏப்ரல் 6 முதல் நோக்கியா லூமியா 520

இந்தியாவில் ஏப்ரல் 6 முதல் நோக்கியா லூமியா 520
ஏப்ரல் 6 முதல் நோக்கியா லூமியா 520, இந்தியா முழுவதும் மொபைல் போன் சில்லரை விற்பனை மையங்களில் விற்பனைக்கு வந்துள்ளதாக, நோக்கியா இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ.10,499 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய விற்பனை தளங்களின் மூலம், முதலில் இந்த போனுக்கான ஆர்டர்கள் பெறப்பட்டன. இந்த போனை வாங்குபவர்களுக்கு, முதலில் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து 1 ஜிபி இலவச 3ஜி டேட்டா தரவிறக்கம் செய்திட வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது ரிலையன்ஸ் காம் வாடிக்கையாளர்கள், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் தளங்களை இரண்டு மாதங்களுக்கு எந்தவித கால மற்றும் டேட்டா வரையின்றி பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் 8 போன் வரிசையில், அனைவரும் வாங்கும் விலையில் வெளியான போன் லூமியா 520. இந்த ஆண்டு தொடக்கத்தில் பார்சிலோனா நகரில் நடைபெற்ற, உலக மொபைல் கருத்தரங்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இரண்டு பரிமாணத்தில் அமைந்த கடினமான கண்ணாடியில் அனைந்த நான்கு அங்குல வண்ணத்திரை தரப்பட்டுள்ளது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் குவால் காம் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர் பொருத்தப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், விண்டோஸ் 8 போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.

5 எம்.பி. திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா, ஹை டெபனிஷன் வீடியோ பதிவினைத் தருகிறது. 9.9. மிமீ தடிமன் கொண்டது. 512 எம்பி ராம், 8 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 64 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி கொண்டுள்ளது.

கூடுதலாக, ஸ்கை ட்ரைவில், 7 ஜிபி வரை டேட்டா ஸ்டோரேஜ் செய்திட வாய்ப்பு அளிக்கப்படுகிறது. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்ப டூல்களைக் கொண்டுள்ளது. இதன் 1430 mAh திறன் கொண்ட பேட்டரி, தொடர்ந்து 9.6 மணி நேரம் பேச வாய்ப்பளிக்கிறது. மின்சக்தி 360 மணி நேரம் தங்குகிறது. மஞ்சள், சிகப்பு, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.
https://goo.gl/36aqZh


19 May 2017

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பின்டு சாட்ஸ் (Pinned Chats) எனும் புதிய வசதி அறிமுகம்

15 May 2017

வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:

18 Jul 2015

தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்

25 May 2015

ஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்

26 Jan 2015

கூகுள் கிளாஸை பின்னுக்குத் தள்ளும் சோனியின் ஸ்மார்ட் ஐ கிளாஸ் அறிமுகம்!

16 Oct 2014

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகம் ஐபேட் ஏர் 2 , ஐபேட் மினி 3

24 Jun 2014

ரிவர்ஸ் கியர் கொண்ட ராட்சத 'கன்பஸ் 410' பைக்

08 Apr 2014

புதிய தொழில்நுட்பம் மூலம் 30 வினாடிகளில் சார்ஜ் ஏறும் செல்போன் பேட்டரி

09 Mar 2014

வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு

24 Feb 2014

மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் உலகின் அதி வேக கார்