tamilkurinji logo


 

இந்தியா‍‍‍‍‍‍-இலங்கை அரையிறுதியில் மோதல்,Sports nees

Sports,nees
செய்திகள் >>> விளையாட்டு

இந்தியா‍‍‍‍‍‍-இலங்கை அரையிறுதியில் மோதல்

First Published : Monday , 17th June 2013 08:27:14 PM
Last Updated : Monday , 17th June 2013 08:27:14 PM


இந்தியா‍‍‍‍‍‍-இலங்கை அரையிறுதியில் மோதல்,Sports nees

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில் இலங்கையிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

வரும் 20ம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் வென்றால், இந்திய அணி பைனலுக்கு முன்னேறலாம்.

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இலங்கை, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.

அரையிறுதிக்கு முன்னேற கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு குசல் பெரேரா(4), சங்ககரா(3 ) ஏமாற்றினர். பின் தில்ஷன், திரிமான்னே சேர்ந்து பொறுப்பாக ஆடினர்.

பால்க்னர் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசிய திரிமான்னே, மார்ஷ் பந்துகளையும் விட்டு வைக்கவில்லை. மறுமுனையில் பந்துகளை "விழுங்கிய' தில்ஷன் (34 ரன், 58 பந்து), தோகர்டி "சுழலில்' வெளியேறினார். தனது 5வது அரைசதம் அடித்த திரிமான்னே, 57 ரன்னுக்கு அவுட்டானார்.

 கேப்டன் மாத்யூஸ் (12) நிலைக்கவில்லை. அதிரடியாக ரன் சேர்த்த ஜெயவர்தனா, ஒருநாள் அரங்கில் 69வது அரைசதம் அடித்தார்.

இலங்கை அணிக்காக முதல் சிக்சர் அடித்த சண்டிமால், 31 ரன்கள் எடுத்தார். குலசேகரா (6), ஹெராத் (2) ரன் அவுட்டாகினர். இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 253 ரன்கள் எடுத்தது. ஜெயவர்தனா (84), மலிங்கா (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆஸ்திரேலிய அணி 29.1 ஓவரில் 254 ரன்கள் எடுத்தால், அரையிறுதிக்கு முன்னேறலாம் என்ற இக்கட்டான நிலையில் களமிறங்கியது. குலசேகரா "வேகத்தில்' வாட்சன்(5) போல்டாக, ஆரம்பமே படுமோசமாக அமைந்தது. ஹியுஸ்(13) நிலைக்கவில்லை.

சிறிது நேரம் அதிரடி காட்டிய மேக்ஸ்வெல்(32), மலிங்கா பந்தில் போல்டானார். பெய்லி(4) ரன் அவுட்டானார். மிட்சல் மார்ஷ்(4) ஏமாற்றினார். இப்படி "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சொதப்ப, 13 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 80 ரன்கள் எடுத்து தவித்தது.

பின் ஆடம் வோஜஸ், மாத்யூ வேட் சேர்ந்து போராடினர். குலசேகரா பந்தில் வேட்(31) வெளியேறினார். பால்க்னர்(17), ஜான்சன்(4) நிலைக்கவில்லை. வோஜஸ்(49) அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

கடைசி கட்டத்தில் மெக்கே, தோகர்டி துணிச்சலாக விளையாட, போட்டியில் சூடு பிடித்தது. இந்த நேரத்தில் பந்துவீச வந்த தில்ஷன் திருப்புமுனை ஏற்படுத்தினார்.

இவரது கலக்கல் "கேட்ச்சில்' மெக்கே(30) அவுட்டாக, இலங்கை வீரர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். ஆஸ்திரேலிய அணி 42.3 ஓவரில் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. தோகர்டி(15) அவுட்டாகாமல் இருந்தார்.

வரும் 20ம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. 19ம் நடக்கும் முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணி, தென் ஆப்ரிக்காவை சந்திக்கும்.

நேற்று, 84 ரன்கள் எடுத்த இலங்கை அணியின் மகிளா ஜெயவர்தனா, 62வது ரன்னை கடந்த போது, ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 11 ஆயிரம் ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார்.

இதுவரை இவர், 394 போட்டியில் 15 சதம், 69 அரைசதம் <உட்பட 11,022 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் இந்த இலக்கை எட்டிய 3வது இலங்கை வீரர் மற்றும் 8வது சர்வதேச வீரரானார்.

முன்னதாக இந்தியாவின் சச்சின் (18426 ரன்), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (13704), இலங்கையின் ஜெயசூர்யா (13430), பாகிஸ்தானின் இன்சமாம் (11739), தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (11498), இந்தியாவின் கங்குலி (11363), இலங்கையின் சங்ககரா (11231) ஆகியோர் இம்மைல்கல்லை எட்டினர்

இந்தியா‍‍‍‍‍‍-இலங்கை அரையிறுதியில் மோதல்,Sports nees இந்தியா‍‍‍‍‍‍-இலங்கை அரையிறுதியில் மோதல்,Sports nees இந்தியா‍‍‍‍‍‍-இலங்கை அரையிறுதியில் மோதல்,Sports nees
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்
இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி சென்னையில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடக்கவுள்ளது.வரும் அக்டோபர் மாதம் இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க அணி நான்கு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகள்

மேலும்...

 பாரபட்சமான தீர்ப்பால் தேம்பி அழுத சரிதா வெண்கலப் பதக்கத்தை பெற மறுப்பு
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான குத்துச்சண்டையில் லைட்வெயிட் பிரிவின் (60 கிலோ) அரையிறுதியில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் எல்.சரிதாதேவியும், தென்கொரியாவின் ஜினா பார்க்கும் நேற்று கோதாவில் இறங்கினர். 4 சுற்றுகளை கொண்ட இப்போட்டியில் பெரும்பாலும் சரிதாதேவியின் ஆதிக்கமே இருந்தது. அவரது தாக்குதலை

மேலும்...

 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று தொடக்கம்: மும்பை-கொல்கத்தா மோதல்
7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் கொண்டாட்டம் அபுதாபியில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும்...

 இலங்கை ஒட்டம் : பைனலில் இந்தியா
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலுக்கு முன்னேறியது இந்திய அணி. நேற்று நடந்த அரையிறுதியில், இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியது. இங்கிலாந்தில் கடைசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in