இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்

இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்
8 முன்னணி அணிகள் மட்டும் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 6-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் ஒரு பயிற்சி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இது இரண்டாவது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டமாகும்.

இந்திய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இலங்கை அணி 333 ரன் எடுத்து இருந்தாலும் விராட்கோலி (144 ரன்), தினேஷ்கார்த்திக் (ஆட்டம் இழக்காமல் 106 ரன்) ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி 49 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ரோகித் ஷர்மா பயிற்சி ஆட்டத்தில் சோபிக்கவில்லை. அத்துடன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சும் எடுபடவில்லை.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதில் வென்று இருந்தது. ஷேன் வாட்சன் அதிரடியாக ஆடி 135 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஜான்சன், ஜேம்ஸ் பவுல்க்னெர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் அவர்களின் ஸ்விங் பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை பொறுத்தே முடிவு அமையும்.

இந்த ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும். இதில் வெற்றி கண்டால் தொடக்க ஆட்டத்தில் வலுவான தென் ஆப்பிரிக்க அணியை கூடுதல் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும்.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பர்மிங்காமில் இன்று நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சந்திக்கின்றன.
https://goo.gl/UtPBZV


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்