இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்
இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி சென்னையில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடக்கவுள்ளது.

வரும் அக்டோபர் மாதம் இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க அணி நான்கு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான போட்டிகள் நடக்கும் மைதானங்களை, இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) பயணம் மற்றும் அட்டவணை கமிட்டி  நேற்று அறிவித்தது.

இதன்படி தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் டில்லி, பெங்களூரு, ஆமதாபாத், நாக்பூரில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஐந்து ஒருநாள் போட்டிகள் சென்னை, கான்பூர், மத்திய பிரதேசம், ராஜ்கோட் மற்றும் மும்பையில் நடந்த தீர்மானிக்கப்பட்டது.

மத்திய பிரதேசத்தில் நடக்கவுள்ள போட்டியை இந்துார் அல்லது குவாலியரில் நடத்தப்படும். மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளை கோல்கட்டா, மொகாலி, தரம்சாலாவில் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இலங்கைக்கு எதிரான மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளை புனே, விசாகப்பட்டினம், டில்லியில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தென் ஆப்ரிக்கா மற்றும் இலங்கை தொடர்களுக்கான முழுஅட்டவணை விரைவில் வெளியிடப்படும் என பி.சி.சி.ஐ., சார்பில் தெரிவிக்கப்பட்டது.
https://goo.gl/UpTVhy






15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்