இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்க நீதிபதி பதவி ஒபாமா உத்தரவு

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்க நீதிபதி பதவி ஒபாமா உத்தரவு
அமெரிக்காவில் வசித்து வருபவர், இந்திய வம்சாவளிப்பெண் டயான் குஜராத்தி (வயது 47). இவர் கடந்த 2012–ம் ஆண்டு முதல் நியூயார்க் தென் மாவட்ட அரசு வக்கீல் அலுவலகத்தின் குற்றப்பிரிவு துணைத் தலைவர் பதவியில் உள்ளார்.

இவரை நியூயார்க் மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

இதுபற்றிய உத்தரவில் அவர், ‘‘அமெரிக்க ஐக்கிய நாட்டின் மாவட்ட நீதிபதி


பதவியில் பணியாற்றுவதற்கு டயான் குஜராத்தியை நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


 அவர் அமெரிக்க மக்களுக்கு மிகச் சிறப்பாக பணி ஆற்றுவார் என்று நான் திடமாக நம்புகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

டயான் குஜராத்தியின் நியமனத்தை அமெரிக்க பாராளுமன்ற செனட் சபை அங்கீகரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

டயான் குஜராத்தியின் தந்தை தாமோதர் குஜராத்தி, அமெரிக்காவில் வெஸ்ட் பாயிண்டில் உள்ள அமெரிக்க ராணுவ கல்லூரியில் பொருளாதார பேராசிரியர் ஆவார்.

டயான் குஜராத்தி, மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகம் வரவேற்றுள்ளது.

செனட் சபை ஒப்புதல் வழங்கி விட்டால் நியூயார்க்கில் மாவட்ட நீதிபதி பதவிக்கு வருகிற (ஆர்டிகிள் 3 நீதிபதி) முதல் தெற்காசியர், டயான் குஜராத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
https://goo.gl/oUFS1s






03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே