இன்று முதல் கேலக்ஸி எஸ் 4 இந்தியாவில் விற்பணை

இன்று முதல் கேலக்ஸி எஸ் 4 இந்தியாவில் விற்பணை
சாம்சங் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய சாம்சங் காலக்ஸி எஸ் 4 ஸ்மார்ட் போன், வரும் ஏப்ரல் 25ல் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற மாதம் நியூயார்க் நகரில், இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஏப்ரல் 26 மற்றும் 27 தேதிகளில், பல நாடுகளில் இந்த போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. சாம்சங் நிறுவனத்திற்கு முக்கிய ஒரு சந்தையாக இந்தியா விளங்குகிறது. விலையைப் பொறுத்தவரை ரூ.40,000 என்ற அளவில் இருக்கலாம்.

பனி படர்ந்த கருப்பு மற்றும் வெள்ளை என இரு மாடல்களில் இது கிடைக்கும். இந்த ஸ்மார்ட் போனுக்குப் போட்டியாக உள்ள, எச்.டி.சி. நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் ரூ. 42,900 என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது.

இதற்கு முன்னர் வந்த காலக்ஸி எஸ்3 ஸ்மார்ட் போனுடன் ஒப்பிடுகையில், இது முற்றிலும் புதிய போனாக இருக்காது. முக்கியமான சில செயல்முறைகளில், அதற்கான பொருட் களில் உயர்நிலையில் உள்ளவை இதில் இணைக்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்ட் 4.1 இருந்த இடத்தில் ஆண்ட்ராய்ட் 4.2.2 தரப்படுகிறது.

ஸ்நாப் ட்ரேகன் எஸ் 4 ப்ராசசருக்குப் பதிலாக, 1.6 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் எக்ஸைனோஸ் ப்ராசசர் உள்ளது. ராம் நினைவகம் 1 ஜிபியிலிருந்து 2 ஜிபி ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 4.8 அங்குல கொரில்லா கிளாஸ் 2, ஐந்து அங்குல கொரில்லா கிளாஸ் 3 ஆக டிஸ்பிளே திரை உள்ளது.

இதில் ஸ்டோரேஜ் வசதி 64 ஜிபி கொண்ட மாடலும் கிடைக்கிறது. 8 எம்பி / 1.9 எம்பி கேமராக்களுக்குப் பதிலாக, 13 எம்.பி/2 எம்.பி திறன் கொண்ட கேமராக்கள் இருக்கின்றன. 2100 mAh திறன் கொண்ட பேட்டரிக்குப் பதிலாக, 2,600 mAh திறன் பேட்டரி இடம் பெறுகிறது.
https://goo.gl/ymtQ3s






19 May 2017

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பின்டு சாட்ஸ் (Pinned Chats) எனும் புதிய வசதி அறிமுகம்

15 May 2017

வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:

18 Jul 2015

தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்

25 May 2015

ஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்

26 Jan 2015

கூகுள் கிளாஸை பின்னுக்குத் தள்ளும் சோனியின் ஸ்மார்ட் ஐ கிளாஸ் அறிமுகம்!

16 Oct 2014

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகம் ஐபேட் ஏர் 2 , ஐபேட் மினி 3

24 Jun 2014

ரிவர்ஸ் கியர் கொண்ட ராட்சத 'கன்பஸ் 410' பைக்

08 Apr 2014

புதிய தொழில்நுட்பம் மூலம் 30 வினாடிகளில் சார்ஜ் ஏறும் செல்போன் பேட்டரி

09 Mar 2014

வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு

24 Feb 2014

மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் உலகின் அதி வேக கார்