tamilkurinji logo


 

இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவர் ஹெல்மெட் ; காரில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு,Two Wheel-drive-goes-on-Two-Everyone-in-the-car-should

Two,Wheel-drive-goes-on-Two-Everyone-in-the-car-should




செய்திகள் >>> தமிழகம்

இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவர் ஹெல்மெட் ; காரில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு

First Published : Thursday , 5th July 2018 07:45:52 PM
Last Updated : Thursday , 5th July 2018 07:45:52 PM


இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவர் ஹெல்மெட் ; காரில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு,Two Wheel-drive-goes-on-Two-Everyone-in-the-car-should

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிவதையும், கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவதையும் உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அவரது பொதுநல வழக்கில் “சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாதவர்கள் அதிகம் செல்கின்றனர். இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வதும் அதிகரித்து வருகிறது. மோட்டார் வாகனச் சட்டத்தின்படி சீட் பெல்ட், ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்கிற சட்டம் உள்ளது.

டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இல்லை; இனி உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடப்போம்: பேரவையில் முதல்வர் பதில்
இதைத் தீவிரமாக அமல்படுத்த அரசுக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு சீட் பெல்ட் அணியாமல் செல்வதாலும், ஹெல்மெட் அணியாமல் செல்வதாலும் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க கட்டாயம் மேற்கண்ட விதிகளை அமல்படுத்தவேண்டும் என்பதை அரசுக்கு உத்தரவாக பிறப்பிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பாவானி சுப்பராயன் அமர்வு முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. இதற்கு அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், முறையாக கண்காணிக்கப்பட்டு அதற்கான அபராதம் மற்றும் தண்டனை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், சாலை விதிகளை மீறுபவர்கள் அதிகரித்து வருவதாகவும், சாலை விதிகளை மதிக்காத போக்கு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.


சீட் பெல்ட் அணிவது, ஹெல்மெட் அணிவது அவசியம் என்பதை உறுதிப்படுத்தவேண்டும், இருசக்கர வாகனங்களில் கார்களில் நிறுவனங்கள் அளித்துள்ள முகப்பு விளக்குகளை மாற்றி, அதிக ஒளி உமிழும் எல்.ஈ.டி பல்புகளைப் பொருத்துவதும், முகப்பு விளக்கில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டவேண்டும் என்ற விதியையும் மீறுவதையும் கண்காணித்து சாலை விதிகளை முறையாக அமல்படுத்தப்படவேண்டும்.

விதியை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதையும், ஹெல்மெட் அணிவது என்பது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இருவருமே அணியவேண்டும், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணியும் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு இந்த உத்தரவுகளை அமல்படுத்துவது தொடர்பான விரிவான அறிக்கையை தமிழக அரசு வரும் 27-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவர் ஹெல்மெட் ; காரில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு,Two Wheel-drive-goes-on-Two-Everyone-in-the-car-should இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவர் ஹெல்மெட் ; காரில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு,Two Wheel-drive-goes-on-Two-Everyone-in-the-car-should இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவர் ஹெல்மெட் ; காரில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு,Two Wheel-drive-goes-on-Two-Everyone-in-the-car-should
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தங்கை காதல் திருமணத்தால் அண்ணன் வெறிச் செயல்
மதுரையில் தங்கையின் காதல் கணவர் மற்றும் அவரது தாயார் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய நபரையும் அவரது ஆட்களையும் போலீசார் தேடி வருகின்றனர். மதுரை சந்தைப்பேட்டை பகுதியைச் பொன்ராஜ் என்பவர் வசித்து வந்தார்.  இவர் கால்டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அதே

மேலும்...

 பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது முதல்வர் எடப்பாடி பழனிசாமி
ஆந்திர பிரச்சனைக்காக தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவரும் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என முதலமைச்சர் பழனிசாமி கூறினார். மேட்டூர் அணையை திறந்து வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-கடைமடை செல்லும் அளவுக்கு மேட்டூர்

மேலும்...

 11 வயது மாணவிக்கு போதை ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்த 17 பேர் கைது
சென்னையில் 11 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில், பிரபல அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தான் 11 வயது சிறுமியை கற்பழித்த கொடூர காட்சிகள் அரங்கேறியுள்ளது.11 வயது,

மேலும்...

 அரசு ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் இரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை
தமிழகத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளை ஒதுக்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தி.மு.க. மற்றும் தினகரன் அணியினர் புகார் கூறினர். ஆனால் அந்த விவகாரம் அப்போது அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.இந்த நிலையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in