tamilkurinji logo


 

இறுதிச் சடங்குக்கு ரூ.4 லட்சம் வைத்துவிட்டு தீக்குளித்த தம்பதி,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




செய்திகள் >>> தமிழகம்

இறுதிச் சடங்குக்கு ரூ.4 லட்சம் வைத்துவிட்டு தீக்குளித்த தம்பதி

First Published : Wednesday , 3rd January 2018 12:38:02 PM
Last Updated : Wednesday , 3rd January 2018 12:38:02 PM


இறுதிச் சடங்குக்கு ரூ.4 லட்சம் வைத்துவிட்டு தீக்குளித்த தம்பதி,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news


போரூரில் குடும்பப் பிரச்சனையில் தங்களால் யாருக்கும் தொல்லை இருக்கக்கூடாது என்பதற்காக தங்களது இறுதிச் சடங்குக்காக தலா ரூ. 2 லட்சம் பணத்தை வைத்துவிட்டு தம்பதியினர்  தற்கொலை செய்துகொண்டனர்.

சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் புஷ்பா நகரைச் சேர்ந்தவர் மனோகரன் (62). ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவரது மனைவி ஜீவா(56). இவர் மத்திய அரசு ஊழியராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு சரவணன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகிறார்.

மகன் சரவணன் போரூரில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சரவணன் நேற்று புத்தாண்டை ஒட்டி பழனிக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக மனோகரன், ஜீவா தம்பதி இருந்தனர். இந்நிலையில் நேற்றிரவு இருவரும் தங்கள் மேல் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டனர்.

தீயின் வெப்பத்தால் இருவரும் சத்தம் போட்டனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைக்க முயன்று முடியாமல் போகவே தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைஅணைத்தனர். ஆனால் தீக்குளித்ததால் உடல் வெந்த நிலையில் தம்பதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வயதான தம்பதி தீக்குளித்து இறந்து போனது குறித்து தகவல் அறிந்த போரூர் எஸ்ஆர்எம்சி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். போலீஸார் விசாரணையின் போது தற்கொலை செய்து கொண்ட கணவன்- மனைவி இருவரும் எழுதிய கடிதம் கிடைத்தது.

அந்த கடிதத்தில் எங்களின் இறுதிச் சடங்கிற்காக காசோலை வைத்துள்ளோம். நாங்கள் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை எங்கள் மரணத்திற்கு பின்னர் எங்களை எரித்துவிடுங்கள். எங்களது இறுதிச் சடங்கிற்கான செலவுக்காக தலா ரூ.2 லட்சம் காசோலை வைத்துள்ளோம். அதை பயன்படுத்திக்கொள்ளவும் என்று எழுதியுள்ளனர்.

கடிதத்துடன் ரூ.2 லட்சத்துக்கான இரண்டு காசோலையும், உறவினர்கள் போன் நம்பரும் இருந்தது. அவர்கள் இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் பெற்றோர் இறப்பு குறித்து மகனுக்கும், மகளுக்கும் தகவல் அளித்துள்ளனர்.

இறுதிச் சடங்கிற்காக பணத்தை வைத்து கொண்டு கணவன்- மனைவி தற்கொலை செய்து கொண்டதால் குடும்பப் பிரச்சினையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்களால் தனது பிள்ளை கஷ்டப்படக் கூடாது என்று சில மாதங்களுக்கு முன்னர் வியாசர்பாடியில் வயதான தம்பதியினர் தற்கொலை  செய்து கொண்டனர். தங்கள் இறுதிச் சடங்கு செலவைக்கூட யாரும் செய்யக்கூடாது என்கிற வைராக்கியத்தில் போரூர் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறுதிச் சடங்குக்கு ரூ.4 லட்சம் வைத்துவிட்டு தீக்குளித்த தம்பதி,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

இறுதிச் சடங்குக்கு ரூ.4 லட்சம் வைத்துவிட்டு தீக்குளித்த தம்பதி,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

இறுதிச் சடங்குக்கு ரூ.4 லட்சம் வைத்துவிட்டு தீக்குளித்த தம்பதி,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை உறுதி
சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வழக்கு: குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை உறுதி சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட  தூக்குதண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சென்னை மாங்காட்டை அடுத்த மெளலிவாக்கம்

மேலும்...

 திருப்பூர் தொழில் அதிபர் கடன் தொல்லையால் தற்கொலை
திருப்பூர் பாளையகாடு காயத்ரி நகரை சேர்ந்தவர் அண்ணாமலை (52). தொழில் அதிபர். தனியாக நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் மொத்தமாக நூல்களை வாங்கி விற்பனை செய்தும் வந்தார்.இவருக்கு சிகப்பி என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.நேற்று மதியம் தொழில்

மேலும்...

 வீட்டு வேலைக்கார பெண்ணை அடித்தே கொன்ற தொழிலதிபர் மனைவி கைது: வளர்ப்பு நாய் இறந்ததால் ஆத்திரம்
சென்னை பெசன்ட் நகரில் வளர்ப்பு நாய் இறந்ததற்கு வீட்டின் பணிப்பெண்தான் காரணம் என்ற ஆத்திரத்தில் பணிப்பெண்ணை தாக்கி, சுடு தண்ணீர் ஊற்றி சித்ரவதை செய்து கொடூரமாக கொலை செய்து நாடகமாடிய தொழிலதிபர் மனைவியும் அவரது உறவுப்பெண்ணும் கைதுச்செய்யப்பட்டனர்.பெசன்ட் நகர், பெசன்ட் அவென்யூ

மேலும்...

 தீபாவளி முன்பதிவு ரயில் டிக்கெட்தொடங்கிய 7 நிமிடங்களில் முடிந்தது
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் முன்பதிவு தொடங்கியது. டிக்கெட் முன்பதிவு செய்ய தெற்கு ரயில்வே சார்பில் 250க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நவம்பர் 6ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் நவம்பர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in