இலங்கை அபார வெற்றி : இங்கிலாந்து சொதப்பல்

இலங்கை அபார வெற்றி : இங்கிலாந்து சொதப்பல்
இங்கிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில், சங்ககரா சதம் அடித்து கைகொடுக்க, இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதன்மூலம் அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

இங்கிலாந்தில், 7வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று, லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்த "ஏ' பிரிவு லீக் போட்டியில் இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதின.

இலங்கை அணியில் திசாரா பெரேரா நீக்கப்பட்டு நுவன் குலசேகரா சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் டிரட்வெல்லுக்கு பதிலாக கிரீம் சுவான் இடம் பிடித்தார். "டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ், "பீல்டிங்' தேர்வு செய்தார்.

டிராட் அபாரம்:

இங்கிலாந்து அணிக்கு இயான் பெல் (20) சுமாரான துவக்கம் கொடுத்தார். பின் இணைந்த கேப்டன் அலெஸ்டர் குக், ஜோனாதன் டிராட் ஜோடி அபாரமாக ஆடியது. இரண்டாவது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்த போது, ஒருநாள் அரங்கில் 17வது அரைசதம் அடித்த குக் (59) அவுட்டானார். அடுத்து வந்த ஜோ ரூட்டுடன் இணைந்த டிராட், தனது 21வது அரைசதத்தை பதிவு செய்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்த போது டிராட் (76) வெளியேறினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஜோ ரூட் (68) தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார்.

போபரா அதிரடி:

"மிடில்-ஆர்டரில்' களமிறங்கிய இயான் மார்கன் (13), ஜாஸ் பட்லர் (0), டிம் பிரஸ்னன் (4) நிலைக்கவில்லை. எரங்கா வீசிய கடைசி ஓவரில் அதிரடி காட்டிய ரவி போபரா, மூன்று சிக்சர், இரண்டு பவுண்டரி உட்பட 28 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 293 ரன்கள் குவித்தது. போபரா (33), ஸ்டூவர்ட் பிராட் (7) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் மலிங்கா, எரங்கா, ஹெராத் தலா 2, நுவன் குலசேகரா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

சங்ககரா அசத்தல்:

சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு குசால் பெரேரா (6) ஏமாற்றினார். பின் இணைந்த தில்ஷன், சங்ககரா ஜோடி பொறுப்பாக ஆடியது. இரண்டாவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்த போது தில்ஷன் (44) அரைசத வாய்ப்பை இழந்தார். அடுத்து வந்த மகிளா ஜெயவர்தனா (42) ஓரளவு கைகொடுத்தார். நுவன் குலசேகராவுடன் இணைந்த சங்ககரா, ஒருநாள் போட்டியில் தனது 15வது சதத்தை பதிவு செய்தார். சுவான் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் விளாசிய நுவன் குலசேகரா, பிராட் பந்தில் ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரி அடித்து அரைசதம் அடித்தார். பிராட் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சங்ககரா வெற்றியை உறுதி செய்தார்.

இலங்கை அணி 47.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சங்ககரா (134), நுவன் குலசேகரா (58) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 2, சுவான் ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை இலங்கையின் சங்ககரா வென்றார்.

https://goo.gl/K7pFiS


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்