tamilkurinji logo


 

இலங்கை ஒட்டம் : பைனலில் இந்தியா,India qualifies to champions trophy finals

India,qualifies,to,champions,trophy,finals




செய்திகள் >>> விளையாட்டு

இலங்கை ஒட்டம் : பைனலில் இந்தியா

First Published : Thursday , 20th June 2013 08:17:30 PM
Last Updated : Thursday , 20th June 2013 08:17:30 PM


இலங்கை ஒட்டம் : பைனலில் இந்தியா,India qualifies to champions trophy finals

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலுக்கு முன்னேறியது இந்திய அணி. நேற்று நடந்த அரையிறுதியில், இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியது.

இங்கிலாந்தில் கடைசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. நேற்று இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. மைதானம் ஈரப்பதமாக இருந்ததால், 40 நிமிடம் தாமதமாக போட்டி துவங்கியது.

 "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, "பீல்டிங்' செய்வது என, சரியான முடிவெடுத்தார்.

இலங்கை அணிக்கு தில்ஷன், குசால் பெரேரா ஜோடி துவக்கம் கொடுத்தது. வேகத்தில் அசத்திய புவனேஷ்வர் குமார், குசால் பெரேராவை (4) விரைவில் வெளியேற்றினார்.

உமேஷ் யாதவ் ஓவரில் இரு பவுண்டரி அடித்த தில்ஷன் (12), காயம் காரணமாக "ரிட்டையர்டு ஹர்ட்' முறையில் பெவிலியன் திரும்பினார்.

சங்ககரா, திரிமான்னே இணைந்து மந்தமாக ஆடினர். 31 பந்தில் 7 ரன்கள் எடுத்த திரிமான்னே, இஷாந்த் வேகத்தில் அவுட்டானார். தொடர்ந்து அசத்திய இஷாந்த் சர்மா, "அனுபவ' சங்ககராவையும் (17) நீடிக்க விடவில்லை.

இலங்கை அணியின் "நிதான' ஆட்டத்தினால், 20.5வது ஓவரில் தான், ஸ்கோர் 50 ரன்களை தாண்டியது. கேப்டன் மாத்யூஸ், அணிக்காக முதல் சிக்சர் அடித்தார். அவ்வப்போது பவுண்டரி அடித்த ஜெயவர்தனா (38 ரன், 63 பந்து), ஜடேஜா சுழலில் சிக்கி போல்டானார்.

பின் மாத்யூசுடன், ஜீவன் மெண்டிஸ் இணைந்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மாத்யூஸ், ஒருநாள் அரங்கில் 14வது அரைசதம் கடந்தார். இவர் 51 (89 பந்து) ரன்னுக்கு அஷ்வினிடம் வீழ்ந்தார். திசரா பெரேரா வந்த வேகத்தில் "டக்' அவுட்டானார்.

குலசேகராவை (1) போல்டாக்கிய அஷ்வின், அடுத்து மெண்டிசையும் (25) திருப்பி அனுப்பினார். இலங்கை அணி 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 181 ரன்கள் மட்டும் எடுத்தது. மீண்டும் வந்த தில்ஷன் (18), மலிங்கா (7) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா, அஷ்வின் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

போகிற போக்கில் எட்டிவிடும் இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி மீண்டும் அசத்தல் துவக்கம் கொடுத்தது.

மலிங்கா பந்தில் பவுண்டரி அடித்த தவான், ஒரு சிக்சரும் விளாசினார். 18 ரன்னில் இரண்டு முறை தப்பிப்பிழைத்த இவர், திசரா பெரேரா ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்தார்.

குலசேகரா பந்துகளில் பவுண்டரிகள் அடித்த ரோகித் சர்மா (33) நிலைக்கவில்லை. தவானுடன் சேர்ந்த கோஹ்லி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மறுமுனையில் அசத்தலை தொடர்ந்த தவான், அரைசதம் கடந்தார். இவர் 68 ரன்னுக்கு அவுட்டனார்.

மலிங்கா ஓவரில் இரு பவுண்டரி அடித்த கோஹ்லி, மெண்டிஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பி, ஒருநாள் அரங்கில் 23வது அரைசதம் கடந்தார். கடைசியில் ரெய்னா ஒரு "சூப்பர்' பவுண்டரி அடிக்க, இந்திய அணி 35 ஓவரில் 2 விக்கெட்டுக்கு, 182 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கோஹ்லி (58), ரெய்னா (7) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை இந்தியாவின் இஷாந்த் சர்மா வென்றார்.

 கடந்த 2009ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, முதன் முதலில் பவுலிங் செய்தார் இந்திய அணி கேப்டன் தோனி. இதில் 2 ஓவர்கள் வீசிய இவர் ஒரு விக்கெட் (டவ்லின்) கைப்பற்றினார். நேற்று மீண்டும் பவுலிங் செய்த இவர், 4 ஓவரில் 17 ரன்கள் கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை.

 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எதிரணியின் இடதுகை துவக்க வீரர்களை "குறி' வைத்து தாக்குகிறார் புவனேஷ்வர் குமார். லீக் சுற்றில் தென் ஆப்ரிக்காவின் இங்ராம் (6 ரன்), வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (21), பாகிஸ்தானின் ஜாம்ஷெத்தை (2) அவுட்டாக்கினார்.

நேற்றைய அரையிறுதியில் இலங்கை அணியின் இடதுகை துவக்க வீரர் பெரேராவையும் (4), விரைவில் "அவுட்' செய்தார். இந்த நான்கு விக்கெட்டில், ரெய்னா மூன்று முறை "கேட்ச்' செய்துள்ளார்.

 நேற்றைய போட்டியின் போது (42.2வது ஓவர்), தமிழர் ஆதரவாளர்கள் இருவர், இலங்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென மைதானத்தில் புகுந்தனர்.

பின் போலீசார் இவர்களை பிடித்துக் கொண்டு சென்றனர். இங்கிலாந்தில் நிலவும் பலத்த பாதுகாப்பையும் மீறி, எதிர்ப்பாளர்கள் உள்ளே புகுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலுக்கு இந்திய அணி, மூன்றாவது முறையாக (2000, 2002, 2013) முன்னேறியது. வரும் 23ல் பர்மிங்காமில் நடக்கும் பைனலில் இங்கிலாந்து அணியை சந்திக்கிறது.

இதற்கு முன், 2000ல் நியூசிலாந்திடம் தோற்றது. மழை காரணமாக 2002ல் இலங்கை அணியிடம் கோப்பையை பகிர்ந்து கொண்டது.

இலங்கை ஒட்டம் : பைனலில் இந்தியா,India qualifies to champions trophy finals இலங்கை ஒட்டம் : பைனலில் இந்தியா,India qualifies to champions trophy finals இலங்கை ஒட்டம் : பைனலில் இந்தியா,India qualifies to champions trophy finals
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் இழந்ததுஇந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில்

மேலும்...

 ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில்  வீழ்த்தியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ரஹானே

மேலும்...

 நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்
பிரிமியர் கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்ற மும்பை வீரர்களுக்கு தனது வீட்டில் விருந்து கொடுத்தார், அணி உரிமையாளர் நீட்டா அம்பானி.எட்டாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் பைனலில் அசத்திய மும்பை அணி, சென்னையை வீழத்தி கோப்பை வென்றது. இதையடுத்து மும்பை வீரர்கள் பல்வேறு

மேலும்...

 இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்
இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி சென்னையில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடக்கவுள்ளது.வரும் அக்டோபர் மாதம் இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க அணி நான்கு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in