இலங்கை கடல்பகுதியில் மீன் பிடித்தால் ரூ.20 லட்சம் அபராதம் - அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

இலங்கை கடல்பகுதியில் மீன் பிடித்தால் ரூ.20 லட்சம் அபராதம் - அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்கு மடி முறைகளை பயன்படுத்தி இலங்கை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதாக இலங்கை மீனவ பிரதிநிதிகள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை.

எனவே இலங்கை கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள், படகு மூலம் மீன் பிடிக்கும் உள்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவது போல இலங்கை கடல்பகுதியில் மீன் பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கும் தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கு அந்நாட்டு மீன்வளத்துறை சார்பில் யோசனை வழங்கப்பட்டது. இதற்கான சட்டத்திருத்தத்தை தயாரிப்பதற்காக தனி குழுவும் அமைக்கப்பட்டது.

அதன்படி இலங்கை மீன் வளத்துறையின் 59/1979 ம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான திருத்த மசோதாவை நேற்று இலங்கை பாராளுமன்றத்தில் அந்நாட்டு மீன்வளத்துறை மந்திரி மகிந்த அமரவீர சமர்ப்பித்தார்.

அந்த மசோதா இலங்கை பாராளு மன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட திருத்த மசோதாவில் உள்ள ஷரத்துகளின் படி 15 மீட்டர் நீளமுடைய படகுக்கு இந்திய மதிப்பின் படி ரூ.20 லட்சத்து 69 ஆயிரத்து 915 அபராதமும், 15 முதல் 24 மீட்டர் நீளமுள்ள படகுக்கு ரூ.82 லட்சத்து 79 ஆயிரத்து 661 அபராதமும், 24 மீட்டர் முதல் 45 மீட்டர் நீளமுள்ள படகுக்கு ரூ.4 கோடியே 13 லட்சத்து 98 ஆயிரத்து 305 அபராதமும், 45 முதல் 75 மீட்டர் நீளமுள்ள படகுக்கு ரூ-.6 கோடியே 20 லட்சத்து 97 ஆயிரத்து 457 அபராதமும், 75 மீட்டருக்கு அதிகமுள்ள படகுக்கு ரூ.7 கோடியே 24 லட்சத்து 47 ஆயிரத்து 33 அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிகிறது.

இலங்கை எல்லைக்குள் அத்துமீறி வரும் வெளிநாட்டு படகுகளின் உரிமையாளர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு 1 மாதத்துக்குள் முடிக்கப்படும் என்றும் தெரிகிறது.

சட்டவிரோதமாக மீன்களைப் பிடிக்கும் படகுகளை இலங்கை கடற்படை காவல் படையினரோ, மீன் வளத்துறையினரோ பறிமுதல் செய்யும் போது அது எந்த நாட்டை சேர்ந்த மீன்பிடி படகோ அந்த நாட்டுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்படும் மீன்பிடி படகு தொடர்பான வழக்கு விசாரணை நடை பெறும் போது அந்த மீன்பிடி படகின் உரிமையார் கோர்ட்டில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் மசோதாவில் கூறப்பட் டுள்ளது.

 மீனவர்கள் நலனுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும் அவர் கூறும் போது

இந்திய எல்லை இலங்கை எல்லை என்பதெல்லாம் மீன்களுக்கு தெரியுமா என்றும் மீன்களைத் தேடி மீனவர்கள் கடலில் எல்லை தாண்டுவது சகஜம் என்றும் கூறியுள்ளார்.

இலங்கை அத்துமீறலை பிரதமரிடம் சொல்லியிருப்பதாகவும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்ககூடாது. இருநாட்டு மீனவர்கள் இடையிலான பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் இலங்கையின் செயல் உள்ளது.

கட்சத்தீவை மீட்க தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
https://goo.gl/Jb75os


19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்

06 Feb 2019

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு

02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை