இளம்பெண் தலைக்கு ரூ. 6.5 கோடி பரிசு அறிவித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள்

இளம்பெண் தலைக்கு ரூ. 6.5 கோடி பரிசு அறிவித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள்


ஈரான் நாட்டை பூர்வீகமாக கொண்ட ஜோன்னா பலனி(23) என்பவரது குடும்பம் டென்மார்க் நாட்டில் குடியேறி அகதி உரிமையை பெற்றுள்ளது.

எனினும், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக போராடாவும், உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு எதிராக போராட வேண்டும் என ஜோன்னா பலனி முடிவு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு கல்லூரி படிப்பை துறந்துவிட்டு டென்மார்க் நாட்டை விட்டு வெளியேறி சிரியாவிற்கு பயணம் மேற்கொண்டார்.
ஆனால், துரதிஷ்டவசமாக சிரியா எல்லையில் ஜோன்னா பலனி கைது செய்யப்பட்டு டென்மார்க் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும், சட்ட விரோதமாக நாட்டை விட்டு வெளியேறிய குற்றத்திற்காக அவர் மீது டென்மார்க் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு ஒரு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், எங்களுக்கு எதிராக போராட துடித்துக்கொண்டு இருக்கும் ஜோன்னா பலனியை கொலை செய்ய வேண்டும். இந்த கொலையை செய்து முடிக்கும் நபருக்கு 1 மில்லியன் டாலர்(6,71,79,450 ரூபாய்) பரிசாக வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஜோன்னா பலனி மீதுள்ள குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், இவ்வழக்கு எதிர்வரும் டிசம்பர் 20-ம் தேதி நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
https://goo.gl/vqZJpG






03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே