tamilkurinji logo


 

இளம் பெண் பலாத்கார வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் கைது,kuldeep singh sengar: CBI arrests MLA as High Court raps UP tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

kuldeep,singh,sengar:,CBI,arrests,MLA,as,High,Court,raps,UP,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> இந்தியா

இளம் பெண் பலாத்கார வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் கைது

First Published : Saturday , 14th April 2018 11:44:18 AM
Last Updated : Saturday , 14th April 2018 11:44:18 AM


இளம் பெண் பலாத்கார வழக்கில்   பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் கைது,kuldeep singh sengar: CBI arrests MLA as High Court raps UP tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

உத்தர பிரதேசத்தில் இளம் பெண் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் உன் னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர். இவரும் அவரது சகோதரர் அனில் சிங்கும் தன்னை பலாத்காரம் செய்ததாக 17 வயது இளம் பெண் ஒருவர் காவல் நிலையத் தில் புகார் அளித்தார்.

அதனால், அந்தப் பெண்ணின் தந்தை பப்புவை குல்தீப் சிங்கும் அனில் சிங்கும் தாக்கியதாகத் தெரிகிறது. ஆனால் போலீஸார், தாக்குதலுக்கு ஆளான பப்புவை கைது செய்தனர்.

இந்நிலையில், சிறையில் பப்பு மர்மமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தப் பின்னணியில், பலாத்கார வழக்கு தொடர்பாக, எம்எல்ஏ குல்தீப்பின் சகோதரர் அனில் சிங்கை போலீஸார் அண்மை யில் கைது செய்தனர்.


எம்எல்ஏ குல்தீப் சிங் மீதும் போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர். எனினும், இந்த வழக்கை உத்தர பிரதேச அரசு சிபிஐ வசம் ஒப்படைத்தது.

இதையடுத்து, வழக்கு தொடர் பாக நேற்று முன்தினம் மாலை சிபிஐ தனது விசாரணையைத் தொடங்கியது. பின்னர் நேற்று அதிகாலை குல்தீப் சிங் வீட்டுக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள், அவரை லக்னோவுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு அறிவித்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று கருத்து தெரிவித்தார். டெல்லியில் அம்பேத்கர் நினைவு இல்லம் திறப்பு நிகழ்ச்சியின்போது அவர் பேசியதாவது:

நாகரீகமிக்க ஒரு சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த சம்பவங்கள் நம்மை வெட்கி தலைகுனிய வைக்கின்றன.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதை நாட்டு மக்களுக்கு உறுதியாகக் கூறிக் கொள்கிறேன். நமது பெண்களுக்கு நியாயமான நீதி கிடைக்கப்பெறும். இவ்வாறு மோடி உறுதியளித் தார்.


இளம் பெண் பலாத்கார வழக்கில்   பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் கைது,kuldeep singh sengar: CBI arrests MLA as High Court raps UP tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema இளம் பெண் பலாத்கார வழக்கில்   பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் கைது,kuldeep singh sengar: CBI arrests MLA as High Court raps UP tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema இளம் பெண் பலாத்கார வழக்கில்   பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் கைது,kuldeep singh sengar: CBI arrests MLA as High Court raps UP tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை

மேலும்...

 நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணிஇல்லை : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி

மேலும்...

 ஜிவாதான் என் மனஅழுத்தத்தைப் போக்குபவள்: தோனி உருக்கம்
என் மகள் ஜிவாதான் என் மனஅழுத்தத்தை போக்கும் மருந்து, மூன்றரை வயதிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார் என்று மகேந்திர சிங் தோனி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்தோனியின் மூன்றரை வயது மகள் ஜிவா. சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்

மேலும்...

 கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழையால் அம்மாநில அணைகள் விரைவாக நிரம்பி வருவதால் கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி என கர்நாடக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in