இஸ்தான்புல் நைட் கிளப்பில் பயங்கரவாத தாக்குதல், 35 பேர் உயிரிழப்பு

இஸ்தான்புல் நைட் கிளப்பில் பயங்கரவாத தாக்குதல், 35 பேர் உயிரிழப்பு
துருக்கியில் நைட் கிளப்பில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர்.

இஸ்தான்புல் நகரில் உள்ள கிளப்பிற்குள் சாண்டா கிளாஸ் உடையணிந்து புகுந்த இரு பயங்கரவாதிகள் புத்தாண்டைய கொண்டாட இருந்த பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர்.

40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். ரெய்னா நைட் கிளப்பில் இந்த பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது பொதுமக்கள் பீதியில் உயிரை காப்பாற்றிக் கொள்ள போஸ்போரஸ் நதிக்குள் குதித்து உள்ளனர். இதனையடுத்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இஸ்தான்புல் நகர் கவர்னர் வாசிப் சாகின் ரெய்னா நைட் கிளப்பில் நடந்தது பயங்கரவாத தாக்குதல் என்று கூறிஉள்ளார். ஆனால் இந்த பயங்கரவாத தாக்குதலை முன்னெடுத்தவர்கள் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

 உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:45 மணியளவில் இந்த பயங்கரவாத தாக்குதல் நடந்து உள்ளது. தாக்குதல் நடந்த போது கிளப்பில் 700-க்கும் அதிகமான மக்கள் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே பயங்கரவாத தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் இன்னும் கிளப்பிற்குள் இருக்கலாம் என்று என்டிவி சேனல் கூறிஉள்ளது.

பயங்கரவாத தாக்குதல் நடத்திய நைட் கிளப் பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து உள்ளனர். அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இஸ்தான்புல், அங்காரா உள்ளிட்ட நகர் புறங்களில் பாதுகாப்பு அதிஉயர் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

இஸ்தான்புல் நகரில் மட்டும் 17 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு அங்காரா மற்றும் இஸ்தான்புல் பல்வேறு பயங்கரவாத தாக்குதலை எதிர்க்கொண்டு உள்ளது. ஐ.எஸ். மற்றும் குர்திஷ் கிளர்ச்சியாளர்களால் இத்தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டது.

இப்போது ரெய்னா நைட் கிளப்பில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அரபிக் மொழியில் கோஷம் எழுப்பியதாகவும் சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் கூறிஉள்ளனர்.

https://goo.gl/Vpz5kx


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே