tamilkurinji logo


 

ஈராக்கில் மது விற்பனைக்கு தடை - சட்டம் நிறைவேறியது,Iraq's Parliament Votes To Ban Alcoholic Beverages

Iraq's,Parliament,Votes,To,Ban,Alcoholic,Beverages




செய்திகள் >>> உலகம்

ஈராக்கில் மது விற்பனைக்கு தடை - சட்டம் நிறைவேறியது

First Published : Monday , 24th October 2016 11:02:43 AM
Last Updated : Monday , 24th October 2016 11:02:43 AM


ஈராக்கில் மது விற்பனைக்கு தடை - சட்டம் நிறைவேறியது,Iraq's Parliament Votes To Ban Alcoholic Beverages

ஈராக் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடு. இங்கு ஷியா பிரிவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். எனவே பாராளுமன்றத்தில் அப்பிரிவை சேர்ந்தவர்களே அதிக அளவில் உள்ளனர்.

இந்த நிலையில் அங்கு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தயாரிக்கவும், இறக்குமதி செய்யவும் இத்தடை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இத்தடையை மீறுபவர்களுக்கு (25 மில்லியன் ஈராக் தினார் (ரூ.15 லட்சம்) அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு எத்தனை எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தார்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. பொதுவாக ஈராக்கில் பெரிய நகரங்களில் கிறிஸ்தவர்களால் மதுபானக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது ஷியா பிரிவினரின் புனித முகரம் மாதம் என்பதால் அவை மூடப்பட்டுள்ளன. இந்த விடுமுறை முடிந்த பிறகு தான் மதுபான கடைகள் தடை விவகாரம் குறித்து முழுமையாக தெரியவரும்.

ஈராக்கில் மது விற்பனைக்கு தடை - சட்டம் நிறைவேறியது,Iraq's Parliament Votes To Ban Alcoholic Beverages ஈராக்கில் மது விற்பனைக்கு தடை - சட்டம் நிறைவேறியது,Iraq's Parliament Votes To Ban Alcoholic Beverages ஈராக்கில் மது விற்பனைக்கு தடை - சட்டம் நிறைவேறியது,Iraq's Parliament Votes To Ban Alcoholic Beverages
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in