tamilkurinji logo


 

உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள-1!!!
,
உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள-1!!!

First Published : Wednesday , 5th October 2011 12:54:04 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள-1!!! ,

வணக்கம் நண்பர்களே, நான் இந்த பதிவை எழுத காரணம் இப்பொழுது பலர் தங்கள் முகநூல் கணக்கு திருடப்பட்டதாகவும், தங்கள் ப்ளாக்கர் கணக்கு திருடப்பட்டு வலைப்பூ முடக்கப்பட்டதாகவும் கூறிவருகின்றனர்.. இவையெல்லாம் யாரோ நமக்கு தெரியாதவர்கள் செய்வதில்லை,(http://vigneshms.blogspot.com) நம் கருத்துக்கு மாற்று உடையவர்கள், உங்களின் பழைய நண்பர்கள் இவர்கள்தான் செய்கிறார்கள். வலைப்பூ முடக்கப்பட காரணம் நாம் ஏதாவது ஒரு பதிவில் இட்ட எதிர்மறைக் கருத்தோ இல்லை ஏதாவது பிரச்சனைக்குரிய பதிவினை இடும்போது அதனை பிடிக்காதவர்கள் இவ்வாறுசெய்யலாம்.

நான் பிரபாகரனுக்கு ஒரு கடிதம் என்ற பதிவினை இட்டபொழுது இரண்டு நாட்கள் கழித்து எனது ஜிமெயிலுக்கு ஒரு மெயில் வந்திருந்தது, என் முகநூல் கணக்கை ஹாக் செய்யும் முயற்சியே அது ஆனால் எனது முகநூல் கணக்கு எனது யாஹூ மெயிலை கொண்டு செயல்படுத்தி இருந்தேன் அதனால் உஷாராகி அந்த மெயிலை செக் செய்தபோது faceb00k team (இரண்டு Oவுக்கு பதில் பூஜ்ஜியங்கள்) என்று இருந்தது,இதே மெயில் என் யாஹூ ஐடிக்கு வந்திருந்தால் நான் ஒருவேளை ஏமாந்திருக்கலாம். நாம் ஹாக்கர்களிடமிருந்து தப்பிக்க வேண்டுமானால் நாம் அதைப்பற்றிய அறிவை பெற்றே தீரவேண்டும். எனவே இந்த பதிவின் மூலம் எனக்கு ஹாக்கிங் பற்றி தெரிந்த (http://vigneshms.blogspot.com)அனைத்தையும் உங்களோடு பகிர்ந்துகொள்ளப்போகிறேன், இதில் சில விஷயங்கள் பிழையாயிருக்கலாம் அவ்வாறு இருந்தால் தயங்காமல் கூறுங்கள்.

முதலில் ஹாக்கிங் என்பதில் உள்ள வகைகளை பற்றி பார்ப்போம்
(இதில் உள்ள ஆங்கில் சொற்களை தமிழில் மொழிபெயர்க்க என்னால் இயலவில்லை யாரேனும் மொழிபெயர்த்து பின்னூட்டத்தில் கூறுங்கள்...)


1)Website Hacking-வலைத்தளதில் ஊடுருவி குழப்பத்தை ஏற்படுத்த

2)Email Hacking-மின்னஞ்சல் கணக்கினை கைப்பற்றி தவறாக பயன்படுத்த

3)Network Hacking-ஒரு பொதுவான வலையமைப்பை ஊடுருவி குழப்புதல்

4)Password Hacking-கடவுச்சொல்லால் பாதுகாக்கப்ப்ட்ட டேட்டாவினை பார்க்க

5)Online Banking Hacking-நமது பணத்தை இணையம் வழியாக திருட

6)Computer Hacking-மற்றவரின் கணினியில் உள்ள கோப்புகளை பார்க்க. 


இதில் அதிகம் செய்யப்படுவது மின்னஞ்சல் ஹாக்கிங்தான், ஏனெனில் இது எல்லாராலும் செய்யக்கூடிய அளவுக்கு சற்று எளிதானதுதான். இணையத்தில் இதை எப்படி செய்வதென ஏகப்பட்ட தளங்கள் சொல்லிக்கொடுக்கின்றன.
இப்பொழுது ஹாக்கிங் செய்ய(http://vigneshms.blogspot.com) பயன்படுத்தப்ப்டும் வழிமுறைகளை பார்ப்போம்.

1)Phishing
2) Key Loggers
3)Tab Napping
4)Social Engineering

இவையே ஹாக்கிங்கில் தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் முறைகள், நாம் இவை ஒவ்வொன்றை பற்றியும், தடுப்பு முறைகள் பற்றியும் விரிவாக இத்தொடர்பதிவில் காணப்போகிறோம்.

1)PHISHING:
     இந்த முறையானது சற்று கடினமானதுதான் ஆனால் ஸ்கிர்ப்ட் எழுத தெரிந்த வெப் டிசைனர்களுக்கு(http://vigneshms.blogspot.com) இது ஓரிரு நிமிட வேலைதான். நாம் உதாரணத்திற்கு முகநூல் கணக்கை எடுத்துக்கொள்வோம்.
நாம் ஹாக் செய்யவேண்டியவரின் மின்னஞ்சல் முகவரிக்கு முகநூலின் நுழைவுப்பக்கத்தை போன்ற ஒரு பக்கத்தை செய்து அதில் அவர் கொடுக்கும் பயனர் பெயர், கடவுச்சொல் நமது மெயிலுக்கு வந்து சேருமாறு கோடிங் எழுதவேண்டும்..

இதனை செய்ய முகநூலின் நுழைவுப்பக்கத்தின் சோர்ஸ் கோடினை பெற்று அதில் சிறு மாறுதல்களை செய்து அதனை வேறு ஏதாவது இலவச சர்வரில் பதிவேற்றம் செய்யவேண்டும், இப்பொது அந்த சுட்டியினை குறிப்பிட்ட நபரின் மெயிலுக்கு பேஸ்புக்கிலிருந்து வருவதை போன்ற ஒரு மின்னஞ்சலை உருவாக்கி அதிலிருந்து அனுப்ப(http://vigneshms.blogspot.com) வேண்டும் அவர் உள்ளிடும் கடவுச்சொல் உங்களை வந்து சேரும். இந்த முறையில் 90% வெற்றி நிச்சயம்.

பாதுகாப்பு வழிமுறைகள்:
இப்போது இந்த பிஷிங் முறையினால் நீங்கள் பாதிக்கப்படாமல் இருக்க என்னென்ன வழிமுறைகளை கையாளலாம் என்று பார்க்கலாம்.
 • உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களின் முகவரியை நன்றாக கவனியுங்கள். சிறு எழுத்து மாற்றம்தான் இருக்கும்.
 • எப்போதும் கணக்குகளில் நுழைவதற்கு உங்கள் மெயிலுக்கு வரும் சுட்டிகளை பயன்படுத்தாமல் தனியாக சுட்டிகளை தட்டச்சு செய்து பயன்படுத்துங்கள்.
 • உங்கள் உலவிகளில் கடவுச்சொல்லை நினைவில் நிறுத்தும் வசதி இருக்கும், அதனை செயல்படுத்திக்கொள்ளுங்கள் ஒவ்வொரு முறையும் டைப் செய்யாதீர்கள்(இதில் வேறொரு ஆபத்து உள்ளது அது பற்றி பின்னால் விளக்குகிறேன்).
 • நீங்கள் மட்டுமே உங்கள் கணினியை பயன்படுத்தும் பட்சத்தில் கணக்குகளில் உள்நுழைந்தே இருங்கள்(Keep Me Logged In).
 • ஒவ்வொரு முறையும் லாகின் பக்கங்களில் உள்ள அட்ரஸ்பாரில் https:// இருக்கிறதா என கவனியுங்கள்.
 • உங்கள் முகநூல் கணக்கில்  செக்யூர்டு லாகின் எனேபில் செய்திடுங்கள்.
 • நீங்கள் லாகின் செய்யும் (http://vigneshms.blogspot.com)பக்கத்தில் உள்ள முகவரி சரியானதுதானா என்று சோதித்துக்கொள்ளுங்கள்.
 • உங்கள் மின்னஞ்சல் முகவரியை முகநூல் போன்ற கணக்குகளில் மறைத்தே வையுங்கள், எல்லோருக்கும் தெரியும்படி வைக்க வேண்டாம்.
 • அடிக்கடி கடவுச்சொல்லை மாற்றிக்கொண்டே இருங்கள்.
மேற்சொன்ன வழிமுறைகளே இந்த முறையிலிருந்து நம்மை காப்பாற்ற வழிவகை செய்யும், வேறு பாதுகாப்பு முறைகள் இருந்தால் அதையும் குறிப்பிடுங்கள், கீலாகர்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இந்த கீலாகர்ஸ் பற்றிய பதிவை படியுங்கள், மற்ற முறைகளைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

கீலாகர்ஸ் என்பவை உங்கள் கணினியில் நிறுவப்பட்டு நீங்கள் தட்டச்சு செய்யும் விசைகளை ஒரு பைலாக சேமித்து அதை மற்றொரு நபருக்கு அனுப்புவதாகும்.கீலாகரில் இரண்டு வகைகள் உள்ளன, அவை

 • Hardware Keyloggers
 • Software Keyloggers 

1)Hardware Keyloggers:
வன்பொருள்(ஹார்ட்வேர்) கீலாகர்ஸ் என்பவை உங்க்ள் கணியின் கீபோர்டின் கனெக்க்டரில் அதே போன்ற வேறொன்றை இணைத்துவிடுவதுதான். இந்த இணைக்கப்பட்ட கீலாகரானது தானாகவே தகவல்களை இணையம் வழியாக அதனை இணைத்தவருக்கு அனுப்பிக்கொண்டிருக்கும்..

ஹார்ட்வேர் கீலாகர்ஸ் உங்கள் கணினியில் இணைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம், இது வன்பொருளாக இருப்பதால் எந்த ஆன்டி-வைரஸ், ஸ்பைவேர் மென்பொருட்களாலும் கண்டுபிடிக்க முடியாது.

வன்பொருள் கீலாகர் (படம்:கூகுள்)


இது கிட்டத்தட்ட கீபோர்டினை கனெக்ட் செய்யும் பின்னை போன்றே இருப்பதால் நீங்கள் பார்த்தாலும் தெரியாது. எனவே இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உங்கள் கணியினை மற்றவரிடம் விட்டுவிட்டு நீங்கள் 2 நிமிடம் வெளியில் சென்றாலே அவர்கள் இந்த கீலாகரை இணைத்து விடலாம்.

2)Software Keyloggers
சாப்ட்வேர்(மென்பொருள்) கீலாகர்ஸ் என்பவை மென்பொருள்களின் மூலம் உங்கள் கீபோர்டில் தட்டப்பட்ட விசைகளை ஒரு கோப்பாக சேமித்து அதில் முன்னரே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிடும்.

எல்லா கீலாகர்களுமே பின்புலத்தில் இயங்குவதால் இவை டாஸ்க்பார் மற்றும் கண்ட்ரோல் பேனலில் தெரியாது. ஆனால் மென்பொருள் கீலாகர்ஸ் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருந்தால் உங்கள் கணினி சற்று வேகம் குறைவாக இருக்கலாம், அவ்வாறு இருக்கும் பட்சத்தில் உங்கள் டாஸ்க் மேனேஜரில் பார்த்து சந்தேகப்படும்படியான ப்ராசஸ்களை எண்ட் செய்துவிடவும்.

இதில் இரண்டு வகை உள்ளது:

 • Physical Keyloggers
 • Remote keyloggers

முதல் வகையானது யாராவது ஒருவர் நேரடியாக உங்கள் கணினியில் நிறுவுவது, அதாவது உங்கள் கணினியை பயன்படுத்தும்பொழுது உங்களுக்கே தெரியாமல் நிறுவி விட்டால் அதன்பின் நீங்கள் தட்டும் ஒவ்வொரு எழுத்தும் அவர் மின்னஞ்சலுக்கு செல்லும்.

இரண்டாவது வகை கீலாகர்ஸ் இணையத்திலிருந்து நீங்கள் ஏதேனும் தரவிறக்கம் செய்யும்போது அதனுடன் சேர்ந்து உங்கள் கணினியில் நிறுவப்பட்டுவிடும், இவை அதிகமாக குறிப்பிட்ட நபரை குறிவைத்து நடப்பதில்லை, பலரின் தகவல்களை திருட வேண்டும் என்ற நோக்கில் விரிக்கப்படும் வலை.

பாதுகாப்பு வழிமுறைகள்:

 • கீலாகர்ஸிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொளவது சற்று கடினம். கீலாக்ர்ஸிடமிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தலாம்.

 • பெரும்பாலான கீலாகர்கள் ஒரு குறிப்பிட்ட விசைகளைத்தான் அவற்றை திறப்பதற்கு பயன்படுத்துகின்றன, ctrl + alt + shift + k என்ற விசைகளை அழுத்தி பாருங்கள், உங்கள் கணினியில் கீலாகர் நிறுவப்பட்டிருந்தால் ஒரு விண்டோவ் தோண்றி கடவுச்சொல் கேட்கும், இதிலிருந்து கீலாகர் நிறுவப்பட்டுள்ளதை அறியலாம்.


 • நிறுவப்பட்டுள்ள கீலாகரை அந்த கடவுச்சொல் இல்லாமல் நீங்கள் எந்த வகையிலும் அழிக்கவோ நீக்கவோ முடியாது, உங்கள் ஹார்டு டிஸ்கினை ஃபார்மட் செய்வதே ஒரே வழி.


 • சில கீலாகர்கள் மேலே குறிப்பிட்ட விசைக்கு பதிலாக வேறு விசைகளை பயன்படுத்தவில்லை என்றால் நம்மால் அதனை கண்டுபிடிக்க முடியாது.


 • உங்கள் ஃபயர்வால் எனேபிள் செய்யப்பட்டிருப்பதன் மூலம் கீலாகர்ஸ் இணையத்தின் வழியே தகவல் அடுப்பதை ஓரளவு தடுக்கலாம், ஆனால் இதுவும் ஒரு முழுமையான பாதுகாப்பினை தராது.


 • சில வைரஸ் எதிர்ப்பு மென்பொருளானது கீலாகர்ஸ் பின்புறத்தில் வேலை செய்துகொண்டிருப்பதை கண்டுபிடிக்கும் ஆற்றலை கொண்டிருக்கும், நான் AVG, AVIRA மற்றும் AVAST ஆன்டி-வைரஸ்களில் சில கீலாகர்ஸை நிறுவி சோதித்தபோது AVG கீலாகர்ஸ் இருப்பதாக எச்சரிக்கை செய்தது, அவாஸ்ட் ஒரு மென்பொருளுக்கு மட்டுமே எச்சரிக்கை தந்தது மற்றவற்றிற்கு தரவில்லை, அவிரா எதற்குமே எச்சரிக்கை தரவில்லை.

 • க்ராக் செய்யப்படும் மென்பொருட்கள், முக்கியமாக டோரண்டிலிருந்து தரவிறக்கப்படும் மென்பொருட்களில் கீலாகர்ஸ் மறைந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது, எனவே அதனை தவிர்க்கவும்.

 • நெட்வொர்க் மானிட்டரிங் மென்பொருட்களை நிறுவி கண்கானிப்பதன் மூலம் கீலாகர்ஸ் இணையத்தில் தொடர்பு கொள்வதை கண்டுபிடிக்கலாம்.

 • பொது இடங்களிலும் வீட்டிலும் கடவுச்சொல்லை தட்டச்சு செய்ய ஆன்-ஸ்கிரீன் கீபோர்டினை பயன்படுத்துங்கள், விண்டோஸில் இதனைப்பெற OSK என்று ரன் கம்மாண்டில் டைப் செய்யவும்.
 • சில மென்பொருள் கீலாகர்கள் மற்றும் ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் கீலாகர்கள் ஆன்-ஸ்கீரின் கீபோர்டுகளில் டைப் செய்யப்படுவற்றையும் கண்டுபிடித்து விடும்.

 • பொது இடங்களில் அல்லது மற்றவரது கணினிகளை பயன்படுத்தும்போது ஒன்-டைம் பாஸ்வேர்ட் எனப்படும் வசதியினை பயன்படுத்தவும்.

 • கடவுச்சொல்லை தட்டச்சு செய்யுமுன் தேவையற்ற சில எழுத்துக்களை தட்டச்சு செய்து கொண்டு, அதனை மவுசால் செலக்ட் செய்துகொண்டு பின்னர் உங்கள் கடவுச்சொல்லை தட்டச்சு செய்யவும்.இவையே கீலாகர்ஸிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள்.

நன்றி : http://vigneshms.blogspot.com

உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள-1!!! <br>, உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள-1!!! <br>, உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள-1!!! <br>,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பின்டு சாட்ஸ் (Pinned Chats) எனும் புதிய வசதி அறிமுகம்
வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டு உள்ளது. பின்டு சாட்ஸ் என அழைக்கப்படும் இந்த வசதி முன்னதாக பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. புதிய வசதியை கொண்டு குறுந்தகவல்களை சாட் ஸ்கிரீனின் மேல் வைத்து கொள்ள முடியும்.பின் (Pin)

மேலும்...

 வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:
வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்வதில், இந்தியா முதலிடத்தில் இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்யும் வசதியை கடந்த ஆண்டு நவம்பரில், வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன்மூலம், உலகம் முழுவதும்

மேலும்...

 தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்
தொலைபேசி, பேஜர், கைபேசி, குறுந்தகவல், ஃபேஸ்புக், ஸ்கைப், வாட்ஸ்அப், வீச்சாட், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்டைம் என படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள், நமது நட்பு வட்டாரங்களையும், தொழில்முறையிலான தொடர்புகளையும் விரிவடையச் செய்துகொண்டே போகும் அதேவேளையில் மக்களை மிக நெருக்கமாகவும் கொண்டுவர

மேலும்...

 ஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்
இன்னும் ஐந்தே ஆண்டில் சாலைகளில் ஓட்டுனர் இல்லாத கார்களை அறிமுகப்படுத்துவோம் என்று கூகுள் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. கூகுள் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய சோதனை ஓட்டங்களில் 11 சிறு விபத்துக்களை (மனிதர்கள் யாருக்கும் காயம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in