tamilkurinji logo
 

உடல் எடையை குறைக்க உதவும் முட்டை கோஸ் | weight loss cabbage diet,weight loss cabbage diet muttaikose juice in tamil

weight,loss,cabbage,diet,muttaikose,juice,in,tamil



உடல் எடையை குறைக்க உதவும் முட்டை கோஸ் | weight loss cabbage diet

First Published : Friday , 2nd March 2018 10:49:16 AM
Last Updated : Friday , 2nd March 2018 10:51:02 AM


உடல் எடையை குறைக்க உதவும்  முட்டை கோஸ் | weight loss cabbage diet,weight loss cabbage diet muttaikose juice in tamil

முட்டைகோஸ் ஒரு கீரை வகையை சேர்ந்த உணவாகும் இதில் பல வகைகள் பல இடங்களில் இருந்தாலும் இதனுடைய முன்னோர் பிறப்பிடம் பிரிட்டன் மற்றும் ஐரோப்பா நாடுகளாகும்

முட்டைகோஸை சமைத்து சாப்பிடுவதைவிட பச்சையாக சாப்பிடுவதே மிகவும் சிறப்பானது இதை எந்த அளவுக்கு அடுப்பில் வைக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு இதன் சத்துக்களை இழந்துவிடும்.

இந்த உண்மையை அறிந்ததாலோ என்னவோ மேலை நாடுகளில் பெரும்பாலான உணவகங்களில் இந்த முட்டை கோஸ் வகையான உணவுகளை பச்சையாக பரிமாறுகிறார்கள்.


முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை நிறைய உள்ளன. எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும்.

மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.


அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம். ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.


வயிற்று புண் உள்ளவர்கள் இந்த முட்டை கோஸ் சாற்றை 3 அவுன்ஸ் வீதம் நான்கு முறை குடித்துவந்தால் வயிற்று புண் குணமாகும்.


இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும்.

எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.


முட்டைகோஸில் டார்டரானிக் என்ற ஒரு வகை அமிலம் உள்ளது அது தேவைக்கதிகமாக உள்ள மாவுப்பொருள்களை கொழுப்பாக மாறாமல் இருக்க செய்கிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு பயனுள்ள உணவாக இருக்கும்.


முட்டைகோஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
முட்டைகோஸில் உள்ள லாக்டிக் அமிலம், தசைகளில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து சிறந்த நிவாரணம் தரும்.


பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும். நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும். எலும்புகளுக்கு வலு கொடுக்கும்.

இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

ஜூஸ் செய்யும் முறை

பாதி முட்டைக்கோஸை எடுத்து சுடுநீரில் அல்லது வினிகரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். * பின் அதனை கேரட் ஜூஸ் உடன் சேர்த்து கலந்து, குடிக்க வேண்டும்.

ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக இதனைப் பருகக்கூடாது. ஒரு நாளைக்கு 1 டம்ளர் மட்டும் போதுமானது. அதிலும் கால் டம்ளர் முட்டைக்கோஸ் ஜூஸ் என்றால், அத்துடன் முக்கால் டம்ளர் கேரட் ஜூஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும்.



உடல் எடையை குறைக்க உதவும்  முட்டை கோஸ் | weight loss cabbage diet,weight loss cabbage diet muttaikose juice in tamil உடல் எடையை குறைக்க உதவும்  முட்டை கோஸ் | weight loss cabbage diet,weight loss cabbage diet muttaikose juice in tamil உடல் எடையை குறைக்க உதவும்  முட்டை கோஸ் | weight loss cabbage diet,weight loss cabbage diet muttaikose juice in tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
பொதுவாக கிழங்குகள் சாப்பிடக் கூடாது. குண்டாகிவிடுவோம் என்று நீங்கள் கேள்விப்படுவதுண்டு. உண்மையில் இதில் சர்க்கரை வள்ளி கிழங்கு விதி விலக்கு.இதன் சுவை அபாரம். இனிப்பாகவும், வாசனையுடன் இருக்கும் இதனை சாப்பிட அனைவருக்கும் பிடிக்கும். அதோடு அதில் சத்துக்களும் அதிகம் உள்ளது.விட்டமின் ஏ,

மேலும்...

 உடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்
தூக்கமின்மை, நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் குறைபாடுடைய திட்ட உணவு போன்ற சில விஷயங்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தக்கூடும்..அதற்கு பதிலாக, நீங்கள் உங்களை கவனித்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான பழக்கங்களை உருவாக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை

மேலும்...

 ஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்
கோடைகாலத்தில் தாராளமாக கிடைக்கும்   பாகற்காயின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பாகற்காயின் கசப்பு தன்மைக்காகவே இதனை பயன்படுத்த தயங்குவோர் ஏராளம். ஆனால் இதன் இலை, காய், பழம், வேர் என அனைத்துமே மிகுந்த மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது. பல்வேறு நோய்களை போக்கும் நோய்

மேலும்...

 இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான உணவுகள் list of foods that lower blood pressure and cholesterol
கெட்ட கொழுப்புக்கள் இரத்தக்குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன. அதற்காக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in