tamilkurinji logo


 

உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 5 வெற்றி: அனைத்து பவுலர்களுக்கும் தோனி பாராட்டு,tamil cricket news world cup 2015

tamil,cricket,news,world,cup,2015




செய்திகள் >>> விளையாட்டு

உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 5 வெற்றி: அனைத்து பவுலர்களுக்கும் தோனி பாராட்டு

First Published : Tuesday , 10th March 2015 06:54:55 AM
Last Updated : Tuesday , 10th March 2015 06:54:55 AM


உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 5 வெற்றி: அனைத்து பவுலர்களுக்கும் தோனி பாராட்டு,tamil cricket news world cup 2015

நியூசிலாந்தில் உள்ள ஹேமில்டன் நகரில் இந்தியா- அயர்லாந்து அணிகள் மோதிய லீக் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தவான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

போட்டிக்குப்பின் இந்திய கேப்டன் தோனி கூறியதாவது:-

இந்தியா மோதிய 5 போட்டிகளிலும் எதிரணியை ஆல் அவுட் செய்துள்ளது. இதுபற்றி பயிற்சியாளர்களில் ஒருவர் என்னிடம் கூறினார். இது ஒரு நல்ல சாதனைதான். இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் அவர்களது வேலையை சிறப்பாக செய்து வருகிறார்கள். அவர்கள் உண்மையிலேயே மேன்மேலும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமல்ல. சுழற்பந்து வீச்சசாளர்களும் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

நாங்கள் பகுதி நேர பந்து வீச்சாளரை பயன்படுத்தும்போதும், அவர்களும் தங்களது கடமையை சிறப்பாக செய்து முடித்தார்கள். நான் விரும்பினால் 5 ஓவருக்குப் பிறகு சுழற்பந்து வீச்சை கொண்டு வந்திருக்கலாம். ஆனால், தொடர்ச்சியாக 10 ஓவர்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொடுத்தேன். அதன்பிறகுதான் போட்டி கையை விட்டு செல்கிறதோ என்று நினைத்தேன். ஆனால், சுரேஷ் ரெய்னா சிறப்பாக பந்து வீசினார். அதனால் அவர் 10 ஓவர்கள் வீசினார்.

பவுலர்களுக்கு எனது ஆலோசனையை கூற விரும்பினேன். எனினும், பவுலர்களை அழைத்து ஆலோசனைக் கூறவில்லை. ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து ஆலோசனையை இந்தியில் வழங்கினேன். இந்திய வீரர்கள் அனைவருக்கும் இந்தி புரியும். ஆனால், எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு இந்தி புரியாததால் விக்கெட் கீப்பிங் பணி செய்துகொண்டே ஆலோசனை கூற முடிந்தது.

உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 5 வெற்றி: அனைத்து பவுலர்களுக்கும் தோனி பாராட்டு,tamil cricket news world cup 2015 உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 5 வெற்றி: அனைத்து பவுலர்களுக்கும் தோனி பாராட்டு,tamil cricket news world cup 2015 உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 5 வெற்றி: அனைத்து பவுலர்களுக்கும் தோனி பாராட்டு,tamil cricket news world cup 2015
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல்

மேலும்...

 IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் பங்கேற்றுள்ள

மேலும்...

 மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர்

மேலும்...

 3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் இழந்ததுஇந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in