tamilkurinji logo


 

உலகக்கோப்பை தென்ஆப்பிரிக்காவை இந்தியாவால் வீழ்த்த முடியும்- லட்சுமணன்,cricket player vvs laxman tamil cricket mews

cricket,player,vvs,laxman,tamil,cricket,mews




செய்திகள் >>> விளையாட்டு

உலகக்கோப்பை தென்ஆப்பிரிக்காவை இந்தியாவால் வீழ்த்த முடியும்- லட்சுமணன்

First Published : Tuesday , 17th February 2015 10:29:31 PM
Last Updated : Tuesday , 17th February 2015 10:29:31 PM


உலகக்கோப்பை தென்ஆப்பிரிக்காவை இந்தியாவால் வீழ்த்த முடியும்- லட்சுமணன்,cricket player vvs laxman tamil cricket mews

உலககோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தியது. உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் வெற்றியை தக்க வைத்து கொண்டது. இந்தியா 2–வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வருகிற 22–ந்தேதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மெல்போர்ன் நகரில் நடக்கிறது.

இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 முறை மோதியுள்ள இந்தியா மூன்றிலும் தோற்றது.

இதனால் அந்த போட்டியில் வெற்றி பெற்று முற்றுபுள்ளி வைக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்திய அணியைவிட தென்ஆப்பிரிக்காவின் பந்துவீச்சு பலம் வாய்ந்ததாக இருக்கிறது. ஸ்டெயின், மார்கல் போன்ற சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியை இந்தியாவால் வீழ்த்த முடியும் என்று முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமணன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி இந்திய வீரர்களின் நம்பிக்கையை அதிகரித்திருக்கும். தென் ஆப்பிரிக்காவின் வேகப் பந்து வீச்சுக்கு எதிராக விளையாடுவது என்பது எப்போதும் சவாலானது.

ஆனாலும் இந்தியாவின் பேட்டிங் வரிசை எந்த ஒரு பலம் வாய்ந்த பந்து வீச்சையும் சந்திக்கும் திறமை வாய்ந்தது. இதனால் தென்ஆப்பிரிக்காவை இந்தியாவால் வீழ்த்த முடியும். இந்திய பவுலர்களிடம் தன்னம்பிக்கை அதிகரித்து உள்ளது. இதை அவர்கள் செயல்படுத்த வேண்டும்.

சரியான திட்டமிட்டு விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். எதிரணியின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.

உலகக்கோப்பை தென்ஆப்பிரிக்காவை இந்தியாவால் வீழ்த்த முடியும்- லட்சுமணன்,cricket player vvs laxman tamil cricket mews உலகக்கோப்பை தென்ஆப்பிரிக்காவை இந்தியாவால் வீழ்த்த முடியும்- லட்சுமணன்,cricket player vvs laxman tamil cricket mews உலகக்கோப்பை தென்ஆப்பிரிக்காவை இந்தியாவால் வீழ்த்த முடியும்- லட்சுமணன்,cricket player vvs laxman tamil cricket mews
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 என்னுடைய தங்கையின் திருமணத்தை மிஸ் செய்கிறேன், நியூசிலாந்தை இறுதி போட்டிக்கு அழைத்து சென்ற எலியாட்
ன்னுடைய தங்கையின் திருமணத்தை மிஸ் செய்கிறேன், என்று நியூசிலாந்து அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றுள்ள எலியாட் கூறியுள்ளார்.  11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க்

மேலும்...

 ஜிம்பாப்வே அச்சுறுத்தலை முறியடித்த ரெய்னா, தோனி: இந்தியா வெற்றி
ஆக்லாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.மீண்டும் இந்திய அணி எதிரணியினரை ஆல் அவுட் செய்த விதத்தில் 300 ரன்களுக்கும் மேல் அடித்து விடுவோம் என்று அச்சுறுத்திய ஜிம்பாப்வேயை

மேலும்...

 உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது வங்கதேசம் அணி
உலகக்கோப்பை கிரிக்கெட் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக வங்கதேசம் அணி முதலில் களமிறங்கியது. முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து

மேலும்...

 உலக கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் கிரிஸ் கெய்ல் இரட்டை சதம்
உலகக்கோப்பை 2015 கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியும்  மேற்கு இந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 50  ஓவர் முடிவில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in