உலகப் புகழ் பெற்ற நீச்சல் வீரர் போதையில் காரை ஓட்டியதால் கைது

உலகப் புகழ் பெற்ற நீச்சல் வீரர்  போதையில்  காரை ஓட்டியதால் கைது
அமெரிக்காவின் பால்டிமோர் நகரைச் சேர்ந்த மைக்கேல் பெல்ப்ஸ் உலகப் புகழ் பெற்ற நீச்சல் வீரர் ஆவார். 29 வயதாகும் இவர் இதுவரை நீச்சல் போட்டிகளில் 22 பதக்கங்களைப் பெற்றுள்ளார். இவற்றில் 18 தங்க பதக்கங்கள் அவர் ஒலிம்பிக் போட்டிகளில் பெற்றவை ஆகும்.

இவர் நேற்று அதிகாலை பால்டிமோரில் உள்ள போர்ட் மெக்கென்ரி சுரங்கப்பாதையில் குறிப்பிடப்பட்டிருந்த மணிக்கு 45 மைல் என்ற பயண விதிமுறையை மீறி 84 மைல் வேகத்தில் தனது காரை ஒட்டி சென்றுள்ளார்.  

நார்த்பவுன்ட் இண்டர்ஸ்டேட் 95 பாதை வழியே விரைவாக சென்றுகொண்டிருந்த இவரது 2014 மாடல் லேண்ட்ரோவர் காரைப் பின்தொடர்ந்த போக்குவரத்துக் காவல்துறையினர் அந்த சுரங்கப் பாதையின் முடிவில் உள்ள சோதனைச் சாவடியில் அவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

குடித்துவிட்டு காரை ஒட்டியதான குற்றத்தில் பதிவு செய்யப்பட்ட பெல்ப்ஸ் பின்னர் காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டார். தங்களுடைய சோதனைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து பெல்ப்ஸ் பிரதிநிதிகளின் கருத்து அறியப்படமுடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.  

கடந்த 2004ஆம் ஆண்டில் பெல்ப்ஸ் தனது 19ஆவது வயதிலும் இதுபோன்ற குற்றத்திற்காக காவல்துறையில் சிக்கினார் என்றும், அப்போது 18 மாதங்களுக்கு அவர் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டார் என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

https://goo.gl/zGxGo1


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்