உலகின் முதல் முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் மரணம்

உலகின் முதல் முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் மரணம்
கடந்த 2005-ல் நவம்பர் 27-ம் தேதி டாக்டர் பெர்னார்ட் தேவாசெல்லே மற்றும் அவரது குழுவினர் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த  இசபெல்லெ டினோரி என்ற பெண்மணிக்கு உலகின் முதல் முகமாற்று அறுவை சிகிச்சையை நடத்தினர்.

இசபெல்லெ டினோரியின் செல்ல நாய் அவரை கடித்ததால் டினோரியின் முகம் விகாரமாக மாறிப்போனது. இதனால், மூளைச்சாவு அடைந்த ஒருவரின் முகப்பாகங்கள் இவருக்கு பொருத்தப்பட்டன.

இந்த முகமாற்று அறுவை சிகிச்சையை தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்த வந்த நிலையில், பக்க விளைவுகள் அதிகரித்து கடந்த ஆண்டு அவரது உடல்நிலை மோசமாகி உள்ளது.

நீண்டகாலம் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி கடந்த ஏப்ரல் மாதம் அவர் மரணம் அடைந்துள்ளார். இந்த தகவலை இன்று தான் ஏமியன்சில் உள்ள மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இசபெல்லியின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் இதுவரை அவர் மரணம் குறித்த தகவலை வெளியிடாமல் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமாற்று அறுவை சிகிச்சையின்போது பக்க விளைவுகள் ஏற்படுவதை தடுப்பதற்காக அவருக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், அந்த மருந்துகளின் வீரியத்தினால் இரண்டு புற்றுநோய் கட்டிகள் உருவாகின. இதன் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது.
https://goo.gl/ouutYd






03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே