உலக கோப்பை கால்பந்து கேமரூனை வீழ்த்தியது பிரேசில்

உலக கோப்பை கால்பந்து கேமரூனை வீழ்த்தியது பிரேசில்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் பிரேசில் அணி கேமரூன் அணியை 1-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

முதல் பாதி ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்தில் பிரேசிலின் பாலின்ஹோ அடித்த பந்தை கேமரூனின் நியோம் கோல் விழாமல் தடுத்தார். 11வது நிமிடத்தில் கேமரூனின் எனோஹ் பவுல் செய்தார். அவருக்கு மஞ்சள் அட்டையும் நடுவரால் காண்பிக்கப்பட்டது. 17வது நிமிடத்தில் பிரேசிலின் நெய்மார் தனது அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார்.

26-வது நிமிடத்தில் கேமரூனின் மேடிப் முதல் கோலை அடித்து கோல் கணக்கை சமன் செய்தார். 35வது நிமிடத்தில் மீண்டும் நெய்மார்  கோல் அடித்து அணியின் கோல் எண்ணிக்கையை 2 ஆக உயர்த்தினார். இந்த நிலையில் முதல் பாதி ஆட்டம் முடிந்தது. ஓய்வுக்கு பின் மீண்டும் 2வது பாதி ஆட்டம் தொடங்கியது. 49-வது நிமிடத்தில் பிரேசிலின் பிரெட் 3வது கோல் அடித்தார்.

86-வது நிமிடத்தில் பிரேசிலின் பெர்னான்டின்ஹோ தனது அணிக்கு 4வது கோலை பதிவு செய்தார். இரண்டாவது பாதியில் மேற்கொண்டு கோல் எதுவும் விழாததால் பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

https://goo.gl/TV3jBP






15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்