உலக கோப்பை கிரிக்கெட்: அயர்லாந்தை பந்தாடியது தென் ஆப்ரிக்கா

உலக கோப்பை கிரிக்கெட்: அயர்லாந்தை பந்தாடியது தென் ஆப்ரிக்கா
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில்  தென் ஆப்பிரிக்க அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பிப்ரவரி 14-ந் தேதி தொடங்கிய இந்த உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இதுவரை 23 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. ‘ஏ’ பிரிவில் தொடர்ந்து 4 வெற்றிகளை பெற்றுள்ள நியூசிலாந்து (ஏ பிரிவு) மட்டுமே கால்இறுதியை உறுதி செய்திருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில்  உள்ள கான்பெர்ராவில் இன்று நடைபெற்ற  24-வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா-அயர்லாந்து அணிகள் மோதின.

இதில்  டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.  தென் ஆப்பிரிக்கா தொடக்க ஆட்டக்காரர் டீ காக் ஒரு ரன்னில் மூனி பந்துவீச்சில் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய டூபிளிஸ்சிஸ், அம்லாவுடன் கைகோர்த்து சிறப்பாக ஆடினார். . அம்லா 159 ரன்களில்(128 பந்துகள், 16 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) ஆன்டி பார்பிர்னி பந்துவீச்சில் அவுட் ஆனார்.  

டுபிளிஸ்சிஸ் 109 ரன்களில் அவுட் ஆனார். ஒ பிரையன் பந்துவீச்சில் போல்ட் ஆகி அவுட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி வில்லியர்ஸ் 24 ரன்களில் ஆவுட் ஆனார். தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 411 ரன்கள் குவித்தது. இறுதியில் மில்லர் 46 ரன்களுடனும், ரோசவ் 61 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.   

இதையடுத்து 412 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணி 50 சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை தடுமாறியது. இதனால் அந்த அணி 100 ரன்களை கடப்பது கடினம் என்று கணிக்கப்பட்ட நிலையில், பால்பிரைன் மற்றும் ஓ பிரையனின் ஆட்டத்தின் உதவியால் 100 ரன்களை கடந்தது. பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வெளியேற அயர்லாந்து அணி 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 201 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அணி அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக அபோட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
https://goo.gl/BkoFSQ


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்