உலக கோப்பை கிரிக்கெட்; இங்கிலாந்து அணியை துவம்சம் செய்த நியூசிலாந்து

உலக கோப்பை கிரிக்கெட்; இங்கிலாந்து அணியை துவம்சம் செய்த நியூசிலாந்து
உலக கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை துவம்சம் செய்த நியூசிலாந்து அணி காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று வெலிங்டன் வெஸ்ட்பேக் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் முன்னணி அணிகளான  இங்கிலாந்தும், நியூசிலாந்தும் (பிரிவு ஏ) மோதின. உலக கோப்பை கிரிக்கெட்டில் கடந்த சில நாட்களாக கத்துக்குட்டி அணிகளின் ஆட்டங்கள் நடந்ததால் பெரிய  அளவில் விறுவிறுப்பு இல்லை


. இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று நினைத்தவர்களுக்கு இங்கிலாந்து பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான நியூசிலாந்து அணி இந்த முறை பேட்டிங்கில் அசுர பலம் வாய்ந்ததாக விளங்குவதை நிரூபித்துள்ளது.  

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து விளையாடியது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பெரிதும் சொதப்பினர். ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அவுட் ஆகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.


தொடக்க ஆட்டக்காரர்கள் இயான் பெல் 8 ரன்களிலும், மொயீன் அலி 20 ரன்களிலும், பேலன்ஸ் 10 ரன்களிலும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சம்மாளிக்க முடியாமல் நடையை  கட்டினர்.  

இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 79 ரன்கள் எடுத்திருந்தபோது ரூட் 28 ரன்களுடனும், மோர்கன் 5 ரன்களுடனும் விளையாடினர்.  இருப்பினும் மோர்கன் 17 ரன்களில் வெட்டோரி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.


இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் வீரர்கள், நியூசிலாந்தின் பந்துவீச்சை சம்மாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில அவுட் ஆகி நடையை கட்டினர்


. இறுதியில் 33.2 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து இங்கிலாந்து 123  ரன்களில் ஆட்டமிழந்தது. தொடக்கம் முதலே இங்கிலாந்து அணியினை ஆதிக்கம் செலுத்தவிடாமல் தனது பந்துவீச்சு மூலம் பதிலளித்த நியூசிலாந்து, இங்கிலாந்தை 123 ரன்களில் சுருட்டியது.

நியூசிலாந்து அணியில் டிம் சவுதி இங்கிலாந்து வீரர்களின் மட்டைக்கு வேலையில்லாமல் செய்தார். டிம் சவுதி 7 விக்கெட்களை கைப்பற்றினார். பவுல்ட்,  வெட்டோரி, மில்லே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். டிம் சவுதி வெறும் 33 ரன்களை மட்டும் கொடுத்து 7 விக்கெட்களை கைப்பற்றி சாதனை  படைத்தார். பின்னர் 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடனே நியூசிலாந்து அணி களமிறங்கி விளையாடியது.


நியூசிலாந்து அணியின் தொடக்க  ஆட்டக்காரர் மெக்கல்லமே தொடக்கம் முதலே பவுண்டரி, சிக்சர் என அடித்து, இங்கிலாந்தின் முயற்சிக்கும் முடிவு கட்டினார். 2


5 பந்துகளை மட்டும்  எதிர்க்கொண்ட மெக்கல்லம் 8 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் என 77 ரன்கள் அடித்து மெக்கல்லம் வோக்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார். குப்தில் 22 ரன்களில் அவுட்  ஆனார்.

நியூசிலாந்து அணி 12.2 ஓவர்களிலே இங்கிலாந்தின் எளிய இலக்கை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தகர்த்தது. ஏற்கனவே இலங்கையை 98 ரன்கள் வித்தியாசத்திலும், ஸ்காட்லாந்தை 3 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்திய நியூசிலாந்து அணி இங்கிலாந்தையும் பணியசெய்து ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் கால்இறுதியை உறுதி செய்துள்ளது.


 நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர் டிம் சவுதிக்கு மேன் ஆப் தி மேட்ச் விருது அளிக்கப்பட்டது. ஏ பிரிவில் இரண்டு போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து அணி இரண்டிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடம்பிடித்துள்ளது.
https://goo.gl/YytmiA


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்