உலக கோப்பை கிரிக்கெட்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியது அயர்லாந்

உலக கோப்பை கிரிக்கெட்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியது அயர்லாந்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வீழ்த்தியது.

11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பிரிஸ்பேனில் இன்று நடைபெற்ற  16-வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள அயர்லாந்து-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள்  மோதின.  இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.


இதன் படி முதலில் களம் இறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 278 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாய்மான் அன்வர் 106 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து அணி தரப்பில்  சோரன்சென், குசாக், ஸ்டிர்லிங், ஓ பிரையன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அயர்லாந்து அணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 49.2 ஓவர்களில் அயர்லாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அனியை அயர்லாந்து வீழ்த்தியது.  அயர்லாந்து அணியில் வில்சன் 80 ரன்களும்  ஓ பிரையன் 50 ரன்களும்  எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.
https://goo.gl/Yhi6Tm






15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்