உலக கோப்பை கிரிக்கெட் -ஸ்காட்லாந்து அணியை இலங்கை அணி 148 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

உலக கோப்பை கிரிக்கெட் -ஸ்காட்லாந்து அணியை இலங்கை அணி 148 ரன்கள்  வித்தியாசத்தில் வீழ்த்தியது.
உலக கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை இலங்கை அணி 148 ரன்கள்  வித்தியாசத்தில் வீழ்த்தியது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் இன்று நடைபெற்ற 36–வது லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) இலங்கை அணி, ஸ்காட்லாந்தை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்களை குவித்தது. இலங்கை அணியில் தொடக்க வீரர் தில்ஷான் 104 ரன்களும் சங்கக்காரா 124 ரன்களும் எடுத்து அசத்தினார். நடப்பு உலக கோப்பை தொடரில் சங்கக்காரா தொடர்ந்து 4 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

இதையடுத்து 364 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஸ்காட்லாந்து அணி இலங்கை அணியின் அனுபவம் வாய்ந்த பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதனால் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்னில் நடையை கட்டினர். 43.1 ஓவர்களில் அந்த அணி 215 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 148 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து அணியில் அதிகபட்சமாக  கோல்மேன் 70 ரன்களையும் மோம்சன் 60 ரன்களையும் எடுத்தனர். இலங்கை அணியில் குலசேகரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டநாயகன் விருது இலங்கை அணியின் சங்கக்காரா பெற்றார்.
https://goo.gl/51HmDq


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்