tamilkurinji logo


 

உலக கோப்பை டி20-இந்தியா அபார வெற்றி,cricket news tamil news

cricket,news,tamil,news




செய்திகள் >>> விளையாட்டு

உலக கோப்பை டி20-இந்தியா அபார வெற்றி

First Published : Sunday , 23rd March 2014 09:52:51 PM
Last Updated : Sunday , 23rd March 2014 09:52:51 PM


உலக கோப்பை டி20-இந்தியா அபார வெற்றி,cricket news tamil news

உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 10 லீக் ஆட்டத்தில்,  நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா 7 விக்கெட்  வித்தியாசத்தில் வென்றது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று  இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி முதலில்  பந்துவீசியது.


வெஸ்ட் இண்டீஸ் அணியால் முதல் 7 ஓவரில் வெறும்  33 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. கேல் 34 ரன் எடுத்து ரன் அவுட்  ஆனார். ஓரளவு தாக்குப்பிடித்த சிம்மன்ஸ் 27 ரன் எடுக்க, மற்ற  வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்  எடுத்தது. ஜடேஜா 3, அமித் மிஷ்ரா 2, அஷ்வின் ஒரு விக்கெட்  வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 130 ரன் எடுத்தால் வெற்றி என்ற  எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தவான், ரோகித்  துரத்தலை தொடங்கினர். பத்ரீ பந்துவீச்சில் தவான் டக் அவுட்  ஆனார். ரோகித் - கோஹ்லி ஜோடி 2வது விக்கெட்டுக்கு அபாரமாக  விளையாடி 106 ரன் குவித்தது. கோஹ்லி 54 ரன் (41 பந்து, 5  பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார்.

யுவராஜ் 10 ரன்னில்  வெளியேறினார். இந்தியா 19.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 130  ரன் எடுத்து தொடர்ச்சியாக 2வது வெற்றியை வசப்படுத்தியது. ரோகித்  62 ரன் (55 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ரெய்னா 1 ரன்னுடன்  ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


உலக கோப்பை டி20-இந்தியா அபார வெற்றி,cricket news tamil news உலக கோப்பை டி20-இந்தியா அபார வெற்றி,cricket news tamil news உலக கோப்பை டி20-இந்தியா அபார வெற்றி,cricket news tamil news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல்

மேலும்...

 IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் பங்கேற்றுள்ள

மேலும்...

 மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர்

மேலும்...

 3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் இழந்ததுஇந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in