உள்ளே...வெளியே... ஜெ. சசியின் மங்காத்தா ஆட்டம்? - 'சுழல்' நாகராஜ்

உள்ளே...வெளியே... ஜெ. சசியின் மங்காத்தா ஆட்டம்?  -  'சுழல்' நாகராஜ்
சிறைக்குள் இருப்பவர்களை எல்லாம் குற்றவாளிகள் என்று சொல்லிவிட முடியாது. இது முன்னாள் முதல்வர் சொன்ன வாக்கு! ஆனால் இந்நாள் முதல்வரோ என்னுடன் இருபத்திநான்கு வருடங்கள் கூடவே இருந்து மக்களின் வரி பணத்தை சுரண்டி சொத்து சேர்த்த தோழி சசிகலாவை குற்றவாளி என்று சொல்லிவிட முடியாது என்ற தோரனையில் மீண்டும் அதிமுக வில் சோத்துக்கொண்டுள்ளார்.

இரு முதல்வரின் கருத்தும் ஒன்றுதான். தி.மு.க மற்றும் அ.தி.மு .க என்ற இரு கட்சிகளும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

"நான் போயஸ் கார்டன் இல்லத்தில் அக்காவுடன் இருந்தவரை வெளியில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஒரளவுக்குத்தான் எனக்கு தெரியும்மே தவிர முழு விபரம் தெரியவில்லை" என சசிகலா சொல்வது சுத்த பொய்யான வார்த்தைகள்.

"என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது. மன்னிக்க முடியாத துரோகம் . அக்காவுக்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எனக்கு வேண்டாதவர்கள்  தான்" என்ற ஒரு பகிரங்க மன்னிப்பு கடிதம் ஒரு முதல்வரின் எண்ணத்தை மாற்றியிருக்கிறது.

இதன் விளைவாக  நீங்கள் கற்பனையில் தீட்டிய "2023 தோலை நோக்கு திட்டம்", தமிழகத்தின்  வளர்ச்சி போன்றவை பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. உங்களின் வளர்ச்சி பணிக்கு 24 வருடங்கள் அணை போட்டவரே இந்த சசிகலாதான்

ஊழல் என்கின்ற அம்பை எய்தவரே இந்த சசிகலாதான். அம்பை எய்தவருக்கு மன்னிப்பாம் ஆனால் அம்பாக  செயல்பட்டவருக்கு மன்னிப்பு கிடையதாம். ஆனால் சசிகலா என்ற அம்பு கொள்ளையடித்தை சுரண்டியதை எப்படி மன்னிப்பது. இது பொதுமக்களின்  சொத்தல்லவோ! ஆகையால் இந்த ஒழுங்கு நடவடிக்கை ஒழுக்கமில்லா நடவடிக்கை போல் தெரிகிறது. எதற்காக  தோழி சசிகலாவை  வெளியேற்றினீர்கள்?. எதற்காக இப்போழுது அரவணைத்துக் கொள்கிறீர்கள்? என்று உங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஒரே குழப்பம்.

நில அபகரிப்பு வழக்குக்கு மக்களிடம் எப்படி ஒரு வரவேற்பு இருந்ததோ அதே போல் சசிகலாவை அ.தி.மு.க வை விட்டும், உங்கள் இல்லத்தை  விட்டும் வெளியேற்றிய போதும் மக்களிடம் ஒரு பெரிய வரவேற்பு இருந்தது. 'இனிமேல் இந்த அம்மா தமிழகத்தை வளர்ச்சி  பாதைக்கு கொண்டு போய்விடுவார்கள்' என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனால் மீண்டும் சசிகலா மீதான ஒழுங்கு நடவடிக்கை  ரத்து என்று சொன்னவுடன் தமிழக  மக்கள் நொந்து போனார்கள்.  ஒழுக்கமில்லாத இந்த சசிகலாவுக்கா ஒழுங்கு நடவடிக்கை  ரத்து? என கேட்பதோடு மட்டுமல்லாமல் தங்களின் 2023 என்ற தொலை நோக்கு திட்டத்தின் வளார்ச்சி  பணிகள் இறந்து விட்டன , என மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.

ஒரு காவல்துறை  விழாவிலே  நீங்கள் சொன்ன கருத்தை இங்கே ஞாபகப்படுத்துகிறேன். ஒரு பெரிய போலீஸ் அதிகாரி ஒரு குற்றவாளிக்கு மன்னிப்பு கொடுத்து நீ இனிமேல் திருந்தி வாழவேண்டும். என்று சொல்லி நல்லெண்ணத்துடன் அவனை வெளியில் அனுப்புகிறார்.  ஆனால் அந்த குற்றவாளியோ திருந்தினானா என்றால் இல்லை,அவன் நேராக யார் தனக்கு மன்னிப்பு வழங்கி தன்னை வெளியில்அனுப்பினாரோஅந்தபோலீஸ்அதிகாரி வீட்டிற்கே போய்  நகை,பணம் பொருட்களை திருடிவிட்டு அந்த அதிகாரியின் மனைவியையும் கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விடுகிறான்.

அதனால் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கொடுத்து அடக்க வேண்டும். இது ஒரு காவல்துறை விழாவில் நீங்கள் சொன்ன கருத்து.

ஆனால் நீங்களோ! உங்கள் தோழி சசிகலா அ.மு.தி.க கட்சிக்கு எதிராகவும், உங்களுக்கு எதிராகவும் சதிவேலைகளில் ஈடுபட்டார்கள் என்று அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை உங்கள் போயஸ் தோட்டத்திலிருந்தும்,  கட்சிலிருந்தும் வெளியே அனுப்பிவிட்டீர்கள் . ஆனால் சசிகலாவின் மன்னிப்பு கடிதம் உங்கள் மனதை மாற்றியதால் மீண்டும் உங்களோடு சேர்த்து கொண்டு உள்ளீர்கள். நீங்கள் சொன்னது போல் இந்த கும்பல், அதிகாரியால் வெளிவந்த குற்றவாளி போல் இந்த கொள்ளை கும்பல் மீண்டும் சதிவேலைகளில் ஈடுபடாது. என்பதற்கு என்ன உத்ரவாதம்? சற்று யோசிங்கள்.


கூடா நட்பு கேடாய் முடியும் என்பதில் சிறிதும் சந்தேகம்மில்லை.  காலம்  பதில் சொல்லும்.
https://goo.gl/e78Cpo


21 Aug 2014

பணிவோம், உயர்வோம்!

19 Jun 2014

மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்

23 Mar 2014

திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்

15 Mar 2014

முதுமை பற்றிய பொன் மொழிகள்

09 Mar 2014

சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்

09 Mar 2014

பொன் மொழிகள்

23 Jan 2014

விரதம் என்றால் என்ன?விரதம் இருப்பதற்கான காரணம் என்ன?

15 Dec 2013

முதுமையின் பொன் மொழிகள்

19 Nov 2013

யோகாசனம்( yogasana )

29 Oct 2013

தீபாவளி --- சிந்தனைக்குச் சில வினாக்கள்!!