உஷாரா இருங்க இன்று உங்க கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கலாம்!!

உஷாரா இருங்க இன்று உங்க கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கலாம்!!
இன்டர்நெட் டூம்ஸ்டே வைரசால் திங்கட்கிழமை உலகம் முழுவதும் 2.5 லட்சம் கம்ப்யூட்டர்களில் இன்டர்நெட் தடை ஏற்படும் என்று தெரிகிறது. கம்ப்யூட்டர்களை இன்டர்நெட் வழியாக செயலிழக்க செய்யும் டூம்ஸ் டே எனப்படும் அலுரான் மால்வேர் (Alureon malware) சாப்ட்வேரை கடந்த நவம்பரில் கண்டறிந்து அமெரிக்க அதிகாரிகள் தடை செய்தனர்.

எனினும், மிக குறைந்த அளவிலான கம்ப்யூட்டர்களின் இன்டர்நெட் இணைப்பில் அது திங்கட்கிழமை ஊடுருவி தடை ஏற்படுத்தக் கூடும் என்று தெரிய வந்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் 2.5 லட்சம் கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்படலாம். ஏற்கனவே ஜியஸ், ஸ்பைஐ ஆகிய வைரஸ்கள் தாக்கிய போது பல லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்கள் செயலிழந்தன. அவற்றுடன் ஒப்பிடுகையில் அலுரான் மால்வேர் பாதிப்பு குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறியுங்கள் :

உங்கள் கம்ப்யூட்டரில் இது போன்று வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிய நீங்கள் www.dns-ok.us கிளிக் செய்தால் பாதிக்கப்டாமல் இருந்தால் பச்சைக்கலரில் வரும். பாதிக்கப்பட்டிருக்குமானால் சிவப்பு நிற இமேஜ் வரும். வரும் 9 ம்தேதி என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் இன்டர்நெட் உபயோகிப்பாளர்கள்.

வைரசை முற்றிலுமாக அழிக்க :

ஒருவேளை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் முதலில் இந்த படிவத்தை forms.fbi.gov/dnsmalware பூர்த்தி செய்யவும். உங்கள் கணினியில் இருந்து அந்த

வைரசை நீக்குவது எப்படி என இங்‌கே விளக்கம் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு: DNS Changer வைரசை கணினியில் இருந்து நீக்குவதற்காக பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான அவிரா ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த லிங்கில் Avira DNS Repair சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் ஆகியதும் exe பைலை இரண்டு கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய தொடங்கியவுடன் கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதுக்காப்பாக உள்ளது. ஆகவே இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகாது.ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மென்பொருள் அந்த வைரசை கண்டறிந்து உங்கள் கணினியில் இருந்து அழித்து விடும்.

மேக்(Mac) கணினிகளுக்கு: மேக் கணினிகளில் இருந்து இந்த வைரசை நீக்க இந்த மென்பொருளை DNS Changer Removal Tool டவுன்லோட் செய்து நீக்கி கொள்ளலாம்.

https://goo.gl/XHA85i


19 May 2017

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பின்டு சாட்ஸ் (Pinned Chats) எனும் புதிய வசதி அறிமுகம்

15 May 2017

வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:

18 Jul 2015

தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்

25 May 2015

ஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்

26 Jan 2015

கூகுள் கிளாஸை பின்னுக்குத் தள்ளும் சோனியின் ஸ்மார்ட் ஐ கிளாஸ் அறிமுகம்!

16 Oct 2014

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகம் ஐபேட் ஏர் 2 , ஐபேட் மினி 3

24 Jun 2014

ரிவர்ஸ் கியர் கொண்ட ராட்சத 'கன்பஸ் 410' பைக்

08 Apr 2014

புதிய தொழில்நுட்பம் மூலம் 30 வினாடிகளில் சார்ஜ் ஏறும் செல்போன் பேட்டரி

09 Mar 2014

வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு

24 Feb 2014

மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் உலகின் அதி வேக கார்