tamilkurinji logo


 

உ.பி. சிறைச்சாலையில் மாபியா கும்பல் தலைவன் சுட்டுக்கொலை,Uttar Pradesh Gangster Munna Bajrangi Shot Dead Inside Jail In .tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Uttar,Pradesh,Gangster,Munna,Bajrangi,Shot,Dead,Inside,Jail,In,.tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,
செய்திகள் >>> இந்தியா

உ.பி. சிறைச்சாலையில் மாபியா கும்பல் தலைவன் சுட்டுக்கொலை

First Published : Monday , 9th July 2018 11:39:09 AM
Last Updated : Monday , 9th July 2018 11:39:09 AM


உ.பி. சிறைச்சாலையில் மாபியா கும்பல் தலைவன் சுட்டுக்கொலை,Uttar Pradesh Gangster Munna Bajrangi Shot Dead Inside Jail In .tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

உத்தர பிரதேச மாநிலத்தில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மாபியா கும்பல் தலைவன் முன்னா பஜ்ரங்கி கைது செய்யப்பட்டு ஜான்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்காக பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

இந்நிலையில், மிரட்டி பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு முன்னா பஜ்ரங்கியை இன்று காலை பக்பத் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ஜான்சி சிறைச்சாலையில் இருந்து சனிக்கிழமை பாக்பத் மாவட்ட சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டார்.

அங்கிருந்து இன்று காலை கோர்ட்டுக்கு கொண்டு செல்வதற்காக வெளியே அழைத்து வந்தனர். அவரை ஏற்றி செல்வதற்காக சிறை வளாகத்தில் போலீஸ் வேன் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, அதே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் மற்றொரு ரவுடியான சுனில் ரதி, திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் முன்னாவை நோக்கி சுட்டுள்ளார். இதில் முன்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் சிறை வளாகத்தில் திடீர் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. கொலையாளி கைது செய்யப்பட்டான். பலத்த பாதுகாப்பையும் மீறி சிறைச்சாலைக்குள் உள்ள கைதிக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது? என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளையும் அதன் தலைவர்களையும் முன்னா ஆதரித்ததால், அவரை போலீசார் என்கவுண்டரில் தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டியிருப்பதாக அவரது மனைவி ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உ.பி. சிறைச்சாலையில் மாபியா கும்பல் தலைவன் சுட்டுக்கொலை,Uttar Pradesh Gangster Munna Bajrangi Shot Dead Inside Jail In .tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema உ.பி. சிறைச்சாலையில் மாபியா கும்பல் தலைவன் சுட்டுக்கொலை,Uttar Pradesh Gangster Munna Bajrangi Shot Dead Inside Jail In .tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema உ.பி. சிறைச்சாலையில் மாபியா கும்பல் தலைவன் சுட்டுக்கொலை,Uttar Pradesh Gangster Munna Bajrangi Shot Dead Inside Jail In .tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 “எங்களை கொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?” கலப்பு திருமண தம்பதி கேள்வி
கேரளாவில் புதியதாக கலப்பு திருமணம் செய்துக்கொண்ட தம்பதி, அடிப்படைவாத கும்பலிடம் இருந்து தங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் தெரிவித்துள்ளார்கள். கொலை மிரட்டல் விடுப்பது தொடர்பாக அவர்கள் பேசும் வீடியோ சமூக வலைதளம் மூலம் வைரலாக பரவுகிறது, இதன் மூலமே இச்சம்பவம்

மேலும்...

 கேரளாவில் கனமழைக்கு ஒரேநாளில் 7 பேர் பலி
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், சூறைக்காற்றால் மரங்கள் முறிந்தன. மேலும், பலத்த

மேலும்...

 போலீஸ்காரரை மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த பெண்
பஞ்சாப் மாநிலம் பரிதாகோட் நகரில் போலீஸ்காரரை  மரத்தில் கட்டி வைத்து பெண் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் இளைஞர் ஒருவர் தன்னுடைய செல்போனில் அதனை படமாக பிடித்து இணையதளத்தில்

மேலும்...

 பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் பல்வேறு பிரச்சினைகளால் கிட்டத்தட்ட முழுமையாக முடங்கியது. இந்த நிலையில் மழைக் கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. பாராளுமன்றம் துவங்கியதும், நியமன எம்.பிக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.  மழைக்கால கூட்டத்தொடரில், ‘முத்தலாக்’ உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in